சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினர் என்ற குற்றச்சாட்டில், திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் சீமான், மேட்டூரில் தனது வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை காவற்துறையினர் கைது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஈரோடு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இரண்டு முறை பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் பிணை கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.



Comments