புலிகள் இல்லை என்றால் இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியலே கிடையாது !

இலங்கையின் அரசியல் ஆரிய பௌத்த சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இன எதிர்ப்பை, தமிழ் இனப் பரம்பலை அழிப்பதை 1850 முதல் அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இவற்றின் வெளிப்பாடே 1905 முதல் சிங்கள அரசியல் வாதிகளான பாரோன் ஜயதிலகா, எப்.ஆர்.சேனநாயக்கா,டி.எஸ்சேனநாயகா,ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆகியோரின் அரசியலாக இருந்துள்ளது. இவர்கள் எல்லாரும் எந்தச் சீமையில் என்ன படிப்பு படித்தாலும், என்ன சமைய நம்பிக்கை உள்ளவராயினும் தமிழனை அடிக்காமலும் புத்த சமையத்துக்கு மாறாமலும் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை அரசியலைக் கொண்டு வந்து விட்டனர். 1948ல் பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தைப் சொத்தாகக் கொண்டிருந்த இலங்கை அனைத்தையும் பாழடித்து இன்று பிச்சைக்கார நாடாக்கிய பெருமை சிங்கள அரசியல் வாதிகளையே சாரும்.

இதில் கைதேர்ந்தவராக முதலடி எடுத்து வைத்தவர் பிறப்பால் வெஸ்லிய மதத்தவராகவும்; அரசியல் வெற்றிக்காக பௌத்த மதததைத் தழுவியருமான சொலமன் றிட்ஜ்வே டயஸ் பண்டார நாயக்கா ஆவார். எந்தப் புத்த மதம் தமக்கு ஆட்சியைத் தரும் எனக் கருதினாரோ அதே புத்த மதத் துறவி எனப் பட்ட பிக்குவின் கரங்களால் அவரது உயிரே பறிக்கப் பட்டது பழைய கதை.

இன மத வெறியைத் தூண்டுவதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை வென்று விடத் தீவிர சிங்கள பௌத்த மத வெறியாளராகத் தம்மை வெளிக்காட்டி 1956ல் ஆட்சிக் கட்டிலைப் பிடித்தார். பாவம் பாதியிலே உயிர் பறிக்கப் பட்டு 1959ல் மரணத்தைத் தழுவினார்.

பண்டார நாயக்க, ஸ்ரீமாவோவின் ஆகிய இரு பிரதமர்களின் மகளும் சோபேர்ண் பல்கலைக் கழகப் பட்டதாரியும் பல வருடகாலம் பரீசில் வாழ்ந்தவரும் தான் சந்திரிகா பண்டாரநாயக்கா. சந்திரிகா வெளி நாட்டுக் கல்வியும் வாழ்வும் பெற்றவர் என்ற போதிலும் தமது சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனையிலும் இலங்கை சிங்களவருக்கு மட்டுமே உரியது என்பதிலும் உறுதியாகக் காணப் பட்டார் என 1986ல் நடந்த அவரது முதல் சந்திப்பு பற்றித் தேசத்தின் குரல் கலாநிதி திரு. அன்ரன் பாலசிங்கம் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழியிலிருந்து ரணிலோ அவருடைய மேற்குலக நாடுகளோ ஒரு சிறு துளி மாற்றமும் கொண்டு வர முடியவில்லை. ஒரு மக்கள் வாக்கெடுப்பு மூலம் இக் கருத்திலிருந்து மாறு படும் அளவுக்கு ஆதரவு எக்காலத்திலும் எவராலும் பெற முடியாது என்பதே யாதார்த்தமாகும். இந்த நிலையில் அனைத்துத் தரப் பினராலும் ஏற்றுக் கொள்ப்படும் தீர்வு என்பது கனவிலும் நினைக்க முடியாத விடையம். இப்படி ஒரு தீர்வைக் கண்டு விடலாம் எனக் கூறுபவர் யாராக இருந்தாலும் அவரே உலகின் மூதல் தர ஏமாற்றுப் பேர்வழி எனத் தயங்காமல் கூறலாம்.

இன்று இலங்கை அரசியல் சிங்கள இன மேலாதிக்க வெறியின் வெளிப்பாடு என்பதே உண்மை. தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமவாய்ப்புக்கள் பற்றிப் பேசுவதோ உரிமை எதுவும் கோருவதோ பயங்கரவாதம் என்ற பெதுமைப் படுத்தலில் உள்ளடக்கப் பட்டுள்ளது. இன்று இதுவே சிங்களத்தின் இறையாண்மைக்கும் தேசத்தின் ஒருமைப் பாட்டுக்கும் குந்தகம் தருவதாகப் பார்க்கப் படுகிறது. இந்தியா உட்பட எந்த உலக நாடும் இந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் எனச் சிங்களம் பிடிவாதமாக உள்ளது.
ஐ.நா., அதன் துணை அமைப்புகளான மனித உரிமை ஆணையம் சேர்ந்த ஏனைய பிற நாட்டவர் அனைவருமே மனித உரிமை மீறல் பற்றி அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தாலே, தடை செய்யப் பட்ட புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் எனக் குறி சுடப்பட்டு விடுகிறார்கள். எந்த அரசின் தேவைக்காக இந்த நாடுகள் தேவையற்று நியாயம் இன்றிப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனரோ அதே குழிக்குள் இந்த நாடுகள் இன்று தள்ளப்பட்டு விட்டன.

இலங்கை அரசின் இந்த விளையாட்டை இந்திய மத்திய அரசும் சுதி குறையாமல் ஜதி பிசகாமல் ஆடி ஜமாய்க்;கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஈழத் தமிழர் பிரச்சனை அதற்கு நேரடியாகச் சம்பந்தப் படாத விடையம். மேலும் மத்திய அரசு தமிழக அரியல்வாதிகளில் தங்கு நிலையில் தொங்கு பாராளுமன்ற ஆட்சி நடத்தினாலும் தமிழ் நாட்டுத் தமிழ் மக்களின் ஆதரவுத் தளம் பலம் கொண்ட கொள்கை சார்ந்த இன மொழி சார்ந்தோ உறுதியாக இருக்க வில்லை.
பணம், வாக்கு மோசடி, தேர்தல் கால இலவசங்கள், பொய் வாக்குறுதிகள் என்பவற்றால் அடிமாட்டு விலைக்கு அரசியல் பதவிகள் பெறப்படுகின்றன.

ஆனாலும் இதுவே ஜனநாயகமாகப் போற்றப் படுகிறது. இக்காரணத்தால் இன்று தமிழகத் தமிழரால் மத்திய அரசின் மீது எந்த வித அழுத்தத்தையும் கொடுக்க முடியாது இருக்கிறது. இதுவே காவேரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை, ஒகனேக்கல் குடிநீர்த்திட்டம் போன்ற பொது மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படாது இருப்பதின் இரகசியம் ஆகும். தமிழக மீனவர் இலங்கைக் கடற் படையால் கொல்லப் படுவதையே தட்டிக் கேட்க இயலாத ஈன நிலையில் இருக்கும் தமிழகம் ஈழத் தமிழருக்கு என்னதான் செய்ய முடியும்?

இந்தியாவில் ஜனாதிபதியிலிருந்து சாதாரண தபால் சேவகர் வரை இலஞ்சம், ஊழல் என்பன இந்திய மக்களின் வாழ்வியலாக மாற்றப் பட்டு விட்டது. இமயம் முதல் குமரி வரை குடும்ப அரசியல் நடக்கிறது. கொள்கை அரசியலைக் கொள்ளை அரசியலாக மாற்றிவிட்டனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எட்டணா காசுக்குக் கடலை வாங்க மரீனா கடற்கரையில் துந்தனா போட்டவர்கள் இன்று பல்லாயிரம் கோடி சொத்துக்கு அதிபதிகளாக இருக்கும் அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

சினிமாவில் பிழைக்க வந்தவர் எப்படிச் சீமையிலும் சொத்துச் சேர்க்க முடிந்தது? மாநில சட்ட சபை முதல் மத்திய மக்களவை வரை இதுவே நடைமுறையாக இருக்கிறது.

அமெரிக்க இந்திய அணு ஒப்பந்த மசோதாவின் போது காங்கிரஸ் கட்சி மத்திய மந்திரிப் பதவிகள் பேரம் நடத்தியது என்பதை மக்களவையில் பல கோடி பண நோட்டுகளைக் கொட்டி பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிகழ்ச்சியை நாம் பார்த்தோம். உளவுத் துறை உட்படப் பல பெரும் பிரமுகர்கள் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளனர். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இந்திய வெளி உறவுச் செயலர் றொமேஷ் பண்டாரிக்கு வைர நெக்லேஸ் கொடுத்தது பழைய கதை.

இன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்தர் இந்திய ஊடக பிரமுகர்களுக்கு பட்டங்கள் பாராட்டுக்கள் வழங்குவதும் அவர்களின் திருமண நிகழ்வுகளில் பங்கு பற்றுவதும் இராஜீக நடை முறைகள் காணாத நடை முறைகளாகும். இவற்றின் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிரான அவதூறுப் பிரச்சாரங்களை உலக அளவில் பரப்புரை செய்து தனது தமிழின அழிப்பைச் செய்கிறது. அதன் மூலம் இந்திய அரசைத் தவறான வழியில் வழி நடத்தவும் உலகத்தின் மனச் சாட்சிக்கும் தடை போட்டு விட முடிகிறது.

இந்திய உளவுத் துறைக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுக்கும் இலவசங்கள் சலுகைகள் வழங்கி தமது பக்கம் சேர்த்துள்ளது சிங்களத் தலைமை. ஏற்கனவே சோ உட்படப் பல இந்தியப் பிரபலங்களுக்கு மகிந்த அரசு வர்த்தக நிறுவனங்களை கொழும்பில் இரகசிய இலஞ்சமாகக் கொடுத்துள்ளது என்ற செய்திகள் உள்ளன.

அமாவாசைக்கும் ஐயருக்கும் தொடர்பு என்ன என்பது எவருக்கும் தெரியும். ஆனால் தமிழக காங்கிரஸ் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலிக்கும் இலங்கை அரச அதிபர் மகிந்தவுக்கும் என்ன உறவு என யாருக்காவது தெரியுமா ?

(அசன் அலி பற்றிய தகவலை வெளியிட்ட நிதர்சன இணையத்துக்கும் அதன் நிருபர் ரவிலோகனுக்கும் எமது நன்றி )

இலங்கைச் சிங்கள அரசுக்கும் தமிழ் நாட்டுக் காங்கிரஸ{க்கும் எந்த அளவுக்கு நெருக்கம் என்பதை இங்கே உள்ள படம் காட்டுகிறது.
அசன் அலியை எதற்கு மகிந்தவும் ரணில் விக்கிரசிங்கவும் பாராட்ட வேண்டும்? புலியை அழிக்கச் சிங்களம் விலைக்கு வாங்கப் பட்டவர்தான் அசன் அலியும் தமிழகக் காங்கிரசாரும். ராஜீவின் கொலை விசாரணையில் தில்லு முல்லு நடத்தித் தான் தப்பித்ததும் அல்லாமல், இலங்கை அரசு அந்தப் பழியைப் புலிகள் இயக்கத்தின் மீது போடவைத்து விட்டது இமாலய சாதனைதான்.

இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நீதி மன்ற நாடகம் ஆடி ஒரு தலைப் பட்சமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து அதன் மூலம் தனது அரசியலை நடத்துவதே இந்தியக் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சிண்டு முடிப்பதையே தனது முதல் வேலையாகக் கொண்டுள்ளது. புலிகள் தடை என்ற ஒன்று இல்லையானால் இந்நேரம் காங்கிரஸ் ஆட்சி காற்றிலே போயிருக்கும். இதனை உணராத தி.மு.க. காங்கிரசுடன் உடன் கட்டை ஏற வேண்டிய நிலைக்கு உள்ளாகி வருவது அதன் தலை விதி.

ஈழத் தமிழினத்தின் அழிவு பற்றியது மட்டும் அல்ல, தமிழக மீனவரின் உயிரைக்கூட பணயம் வைத்து ஏனைய கட்சிகளையும் பேச விடாது இலங்கை அரசுக்குப் பாத சேவை செய்கிறது தமிழக காங்கிரஸ் கட்சி. தாங்கள் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற பயத்தில் இந்த ஆட்டத்தில் ஜெயலலிதாவும் சுப்பிரமணிய சுவாமியும் உண்மைகளை வெளி வர விடாது விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். சோனியா காந்திக்கு கொம்பு சீவித் தேசாபிமானம் பேசித் தேசத் துரோகம் செய்கிறது தமிழக காங்கிரஸ் கட்சி.

மொத்தத்தில் பார்க்கும் போது இலங்கையிலும் இந்தியாவிலும் புலிகள் இல்லை என்றால் வேறு அரசியலே கிடையாது என்ற நிலை இருப்பது தெரிகிறது தமிழகத்தில் தனது இந்திய தேசத்துக்கும், இனத்துக்கும் துரோகம் செய்யும்இந்திய, தமிழகக் காங்கிரஸ் கட்சியை இந்திய மக்களும், முக்கியமாகத் தமிழகத் தமிழினம் என்ன செய்யப் போகிறது ?

காங்கிரசாரின் இரட்டைத் துரோகத்தை மன்னித்து மறந்து தானும் அழிந்து ஈழத் தமிழினமும் அழியத் துணை போகுமா ?

சுயமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

ஆய்வு:த.எதிர்மனசங்கம்.

சுவிஸ்முரசம்

Comments