புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

Bharathiraja

விடுதலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல்ஹாசன் போன்ற முதல்நிலை நடிகர்களும் உணர்ச்சிமயமான ஆதரவைத் தெரிவித்தனர்.
இயக்குநர்கள் சீமான், அமீர் இருவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்றனர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர்.


தட்ஸ் தமிழ்

Comments