திருகோணமலை பகுதியில் தமிழின விகிதாசாரத்தை குறைக்க இன விருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறை படுகொலை செய்து வருகிறது.
சேருவில தங்கநகர் பிரதேசத்தில் நேற்று புதன்திழமை அதிகாலை 3:30 நிமிடமளவில் இளம் குடும்பஸ்தரான தங்கநகரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான ஆனந்தராஜா சுதந்திரராஜா, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சேருவில் மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தமிழ் இளைஞர்களை கடத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த இரு பிரதேசங்களிலும் 14 இளைஞர்கள் கொல்லப்பட்டும் 5 பேர் கடத்தப்பட்டும் உள்ளதாக திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுக்களிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னாள் அரச தலைவருமான அமரர் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இவ்வாறான கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments