முரசுமோட்டையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் உள்ள முரசுமோட்டை மூன்றாம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:45 நிமிடத்துக்கு எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் கொல்லப்பட்டவரின் உடல் தருமபுரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரின் பெயர் விபரம் உறுதிப்படுத்தப்படவில்லை.
மகேந்திரன் (வயது 41)
நகுலேஸ்வரன் (வயது 21)
சுவேந்தன் (வயது 30)
காசிநாதன் (வயது 34)
சரோஜினிதேவி (வயது 33)
சிவபாக்கியம் (வயது 54)
உதயகுமார் (வயது 28)
ஜெயராஜா (வயது 44)
ஆகியோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்ணொருவர் மயக்க நிலையில் உள்ளார். அவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
புளியம்போக்கணைப் பகுதியில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் தங்கராசா கமலாம்பிகை (வயது 60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Comments