மதுரை:இலங்கையில் தமிழர்கள் அழிவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது எனத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் விடுத்த அறிக்கையில்,
இலங்கையில், முல்லைத் தீவு அருகே கல்மடு நரிப் பகுதியில் பேரழிவைச் சந்தித்த சிங்கள ராணுவம், அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதி நோக்கி ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதலை ஈவு இரக்கம் இன்றி தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் விளைவாக 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கூட எடுத்துச் செல்ல முடியாத அவல நிலையில் அங்கு தமிழர்கள் உள்ளனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமலும் உணவு இல்லாமலும் தமிழ் மக்கள் அங்கு பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் அழிவதை மத்திய அரசு கண்மூடி வேடிக்கை பார்க்கிறது. இலங்கையில் உனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments