போரில் வெற்றி தோல்வி என்பது என்ன? ஒரு தரப்பின் பேரழிவு மறு தரப்பின் வெற்றியாக கொள்ளப்படுவதே போரியலின் வெற்றி தோல்விக்கான கருதுகோள். உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில் பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.
ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என மிகவும் பெரியதொரு கூட்டம் அலைமோதுகின்றது. எதன் அடிப்படையில் இந்தக் கூட்டம் அலைமோதுகின்றது.
படைத்துறை ரீதியாக விடுதலைப்புலிகள் பேரழிவை சந்தித்துள்ளார்கள் என்று இவர்கள் நம்பியுள்ளார்களா? அதற்காக முன்வைக்கப்பட்ட சான்றுகள் என்ன? என்பவை தான் இவர்களின் கருத்துகளை பார்க்கும் போது ஒவ்வொரு மனங்களிலும் எழும் மில்லியன் டொலர் கேள்விகள். ஏனெனில் படைத்துறை ரீதியாக எந்த ஒரு தரப்பும் அழிவை சந்திக்காத போது வெற்றி தோல்விகளை கணிக்க முடியாது. கைவிடப்பட்ட பதுங்கு குழிகளும், நிலங்களும், மரங்களும், அரச கட்டிடங்களும் ஒரு தரப்பின் பேரழிவாக கொள்ள முடியாது. இருந்த போதும் அரச தரப்பு மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் தென்னிலங்கையை மட்டுமின்றி அகில உலகத்தையும் ஒரு மாயைக்குள் தள்ளியுள்ளது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் 1995 களில் யாழ் நகரத்தை தமது தலைநகரம் என அவர்கள் அறிவிக்கவில்லை, ஆனால் சந்திரிகா அரசாங்கம் தனது போருக்கு வலுச்சேர்த்து, தென்னிலங்கையில் அதிக அரசியல் ஆதரவை திரட்டும் முகமாக யாழ்குடாநாட்டை விடுதலைப்புலிகளின் தலைமைத் தளமாக தானே பிரகடனப்படுத்திக் கொண்டது.
கிளிநொச்சி நகரத்தையும் விடுதலைப்புலிகள் தமது தலைநகரமாக அறிவிக்கவில்லை. அது அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு உகந்த இடம். மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசம். அவ்வளவு தான். ஆனால் விடுதலைப்புலிகளின் பிரதான தளமாகவும், தலைநகரமாகவும் கிளிநொச்சி நகரம் சித்திரிக்கப்பட்டது.
உலகின் விடுதலைப்போராட்ட வரலாறுகளை நாம் கருத்தில் எடுத்தால் அவர்களின் பிரதான நிலையிடங்களும், தளங்களும் அடிக்கடி இடம்மாறியிருந்ததை நாம் காணலாம். பண்டைய காலத்தில் நிலப்பரப்பை கைப்பற்றுவது அரசர்களின் வெற்றியாக கருதப்பட்டது, ஆனால் அதே நிலப்பரப்புக்கள் மீண்டும் அதற்கு உரிமை உடையவர்களால் கைப்பற்றப்பட்ட போது ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து தான் மெல்ல மெல்ல நவீன போரியல் உத்திகள் உருவாகியிருந்தன.
நவீன போரியல் தத்துவங்களில் நிலப்பரப்புக்களின் நீள அகலத்திலோ அல்லது ஆட்பல அதிகரிப்புக்களிலோ போரின் நகர்வு அதிகம் தங்கியிருப்பதில்லை. அதற்கு அப்பால் போரின் நகர்வுத்திறனை தீர்மானிக்கும் காரணிகளாக நவீன ஆயுதங்களும் அதற்கு ஏற்ற களமுனைகளும், போரியல் உத்திகளுமே அங்கம் வகிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் ஆட்தொகையையும், ஆயுத வளங்களையும் கருத்தில் எடுத்தால் விடுதலைப்புலிகளின் ஆட்பலமும், ஆயுத பலமும் குறைவானவை, எனவே அவர்கள் படைவலுச்சமநிலையை எட்டுவது என்பது கொள்கை ரீதியாக சாத்தியமற்ற ஒன்றாகவே முன்னர் பலருக்கும் தோன்றியிருந்தது. ஆனால் 2001 ஆம் ஆண்டு தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வியுடன் ஒரு பøடவலு சமநிலை ஏற்பட்டது எவ்வாறு?
படை வளங்களுக்கு அப்பால் போரியல் உத்திகள் படை வலுச்சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து விடுகின்றன. உதாரணமாக ஏறத்தாழ 54 இலட்சம் யூத மக்களை கொண்ட இஸ்ரேல் எவ்வாறு பல கோடி மக்களை கொண்ட அரபு நாடுகளின் மத்தியில் வலுவுள்ளதாக திகழ்கின்றது?
நவீன ஆயுதங்களும், நுட்பமான போரியல் உத்திகளும் தான் அதற்குக் காரணம்.
வன்னியின் தற்போதைய நிலையும் அதுதான். அரச தரப்பு விடுதலைப்புலிகளினதும், தமிழ் மக்களினதும் உளவுரண்களை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பிரசார போரின் நோக்கமும் அதுவே. ஆனால் இதனைக் கொண்டு வெற்றி தோல்விக ளையோ அல்லது படைவலுச் சமநிலை களையோ யாரும் கணிப்பிட்டுவிட முடியுமா என்பதும் கேள்வியே.
இருந்த போதும் பாரிய படை வளத்துடன் இராணுவம் முல்லைத்தீவை நோக்கிய முற்றுகையை தீவிரமாக்கி வருகையில் கடற்படையினரும் முல்லைத்தீவில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான 20 கடல்மைல் நீளமான கடற்பரப்பில் 25 க்கு மேற்பட்ட கடற்படை கப்பல்களை நிறுத்தியுள்ளனர்.
இந்தப் படகு தொகுதியில் அதிகவேக டோராப்படகுகள், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புக் கடற் தாக்குதல் பிரிவு , விரைவு நடவடிக்கைப் பிரிவு போன்ற கடற்படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவளைப்புக்கும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடற்படையினரின் இந்த வியூகத்தின் மீது கடற்புலிகள் கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் ஒரு டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன், அதில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதøலப்புலிகளின் நான்கு தாக்குதல் படகுகளை தாம் எதிர்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்களில் தமது அதிவேகத்தாக்குதல் படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததாகவும் கடற்படை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. வெடிமருந்து நிரப் பப்பட்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு டோரா படகிற்கு அருகில் வெடித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (16) ஏ9 பாதையின் இரணைமடுப் பகுதிக்கு கிழக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள தர்மபுரம் பகுதிக்கு நகர்ந்த 571 மற்றும் 572 ஆவது பிரிகேட்டுக்களை சேர்ந்த இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது 51 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்திவெளியிட்டது. எனினும் 20 புலிகளும் 7 படையினரும் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சிறப்பு கொமாண்டேப் படையினரை பயன்படுத்தியிருந்தார். இந்த நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலானது படைத்தரப்புக்கு மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இரணைமடு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலின் போது ரீ55 ரக டாங்கியை பயன்படுத்தியிருந்த விடுதலைப்புலிகள் தற்போது, ரீ86 ரக கவசத்தாக்குதல் வாகனத்தை (அணூட்ணிதணூஞுஞீ ஊடிஞ்டtடிணஞ் ஙஞுடடிஞிடூஞு) பயன்படுத்தியுள்ளனர். இந்த வாகனமானது துருப்புக்காவியாகவும் பயன்படுத்தப்பட முடியும் (8 பேர் பயணம் செய்ய முடியும்). சோவியத்தின் ஆMக1 கவசத்தாக்குதல் வாகனத்தின் பிரதி வடிவமான இந்த வாகனம் சீன நாட்டு தயாரிப்பõகும். விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இதுவரை காலமும் பீரங்கி மற்றும் மோட்டார் படையணிகளின் வளர்ச்சியில் இராணுவத்தின் தாக்குதலுக்கு நிகரான வளாச்சியை கண்டிருந்ததுடன் அது படைத்தரப்புக்கு பாரிய பின்னடைவுகளை கொடுத்ததுடன், களமுனை மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இராணுவத்தின் கவசத்தாக்குதல் படையணி பயன்படுத்தும் டாங்கிகளையும், கவசத்தாக்குதல் வாகனங்களையும் ஒத்த கனரக வாகனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதைய டுத்து விடுதலைப்புலிகள் கவசத்தாக்குதல் படையணியை உருவாக்கி விட்டனர் என்ற தகவலை இந்த தாக்குதலின் பின்னர் கொழு ம்பு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. ஓயாதஅலைகள்02, ஓயாத அலைகள்03 நடவ டிக்கை மற்றும் ஆனையிறவு மீட்பு நடவ டிக்கைகள் போன்றவற்றில் விடுதலைப் புலி கள் பெருமளவான கவசத்தாக்குதல் வாகனங் களையும் டாங்கிகளையும் கைப்பற்றியி ருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
மேலும் கடந்த வியாழக்கிழமை விசுவமடுவை அண்டிய நெத்தலியாறு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை நோக்கி முன்நகர்ந்த இராணுவ அணிகளின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதித்தாக்குதல்களுக்கு இரு தரப்புகளும் தம்மைத் தயார்ப்படுத்தி வரும்போதும், வன்னியில் வாழும் மக்கள் குறுகிய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் கடுøமயான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். அங்கு நடைபெற்ற தொடர் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் கடந்த வியாழக்கிழமை வரை ஏறத்தாழ 146 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூன்று தினங்களில் 88 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை வள்ளிபுனம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இயங்கிவந்த முல்லைத்தீவு வைத்தியசாலையும் எறிகணைத்தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது, இதன் போது 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 100 க்கு மேற்பட்டோர் காயமøடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்துவரும் இந்த மக்களை குண்டு வீச்சுக்கள் கடுமையாக பாதித்து வருகின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் அங்கு நடைபெற்ற தாக்குதல்களில் 146 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் பலர் சிறுவர்களும் குழந்தைகளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருமளவில் காயமடையும் மக்களை பராமரிக்கும் வைத்தியசாலை வசதிகள் அங்கு இல்லை. இந்த நிலையில் காயமடையும் மக்கள் வீடுகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட படுக்கைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதும் வேதனையானது. இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், உலகின் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒன்றுபட்டு வருகையில் அதிக தமிழ் மக்களை கொண்ட தமிழகத்தின் பங்களிப்புகள் காத்திரமான செயல்திறனை ஆற்ற முடியும். உலகெங்கும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்திவரும் போதும் அனைத்துலக சமூகம் இது தொடர்பில் அதிக கவனம் எடுக்காதது வேதனையானது.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதும், அதனை நடைமுறைப்படுத்தி வருவதும் ஒருபுறம் இருக்க, பேச்சுக்களின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறைகூவல் விடுத்து வந்த அனைத்துலகத்தின் முக்கிய நாடுகளும் இன்று தமிழ் மக்கள் பாரிய ஒரு நெருக்கடிக்குள் நிற்கையில் மௌனமாகி போனது கவலையானது. அனைத்துலகத்தின் ஊடகங்களும் இந்த மனித அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் பாரபட்சம் காட்டி வருகின்றன. இவை தவிர தமிழ் மக்களின் போராட்டம் படைத்துறை ரீதியாக நசுக்கப்பட்டால் இலங்கையில் கால்பதிப்பது யார் என்ற போட்டிகள் அனைத்துலகின் வல் லரசு நாடுகளிடம் ஏற்பட்டுள்ளதை தற்போது உணரமுடிகின்றது. இலங்கைக்கு வந்து செல்லும் அதிகளவான படை அதிகாரிகளினதும், ஆலோசகர்களினதும் வரவுகளில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவும் தனது உளவு விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பான "றோ'வின் விமானம் ஒன்று வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த விமானம் முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து பின்னர் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளது எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விமானம் எதுவும் பறக்கவில்லையென கடந்த வியாழக்கிழமை விமானப்படைப் பேச்சாளர் ஜனகநாணயக்கார அதனை மறுத்திருந்தார். கடந்த ஜனவரி 3 ஆம் நாளும் விமானம் மூலம் வன்னிப் பகுதியை இந்திய உளவு அமைப்பு கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 2006 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலும் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், 27 பேர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என அரச தரப்பின் பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெருமளவான ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எஞ்சியுள்ள ஊடகவிய லாளர்களும் போர் தொடர்பாக அரசாங்கம் வெளியிடும் தகவல்களை எழுதிவிட்டு மௌ னமாக இருந்துவிடுகின்றனர். எனவே வன்னிப் போர் நடவடிக்கையில் ஒரு தரப்பின் தக வல்கள் தான் அனைத்துலகத்தின் கவனத்துக்கு அதிகம் செல்கின்றன. இந்த தகவல்களை நம்பியே அனைத்துலகத்தின் கணிப்பீ டுகளும், செயற் பாடுகளும் அமைந்துள்ளன.
- வேல்ஸிலிருந்து அருஷ் -

Comments