இலங்கையில் இனப்படுகொலை;தமிழகத்தில் தமிழர்களாகவே அழிந்துகொள்கிறார்கள்: காசி ஆனந்தன்!


இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிரியால் அழிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் தமிழர்களாகவே அழிந்துகொள்கிறார்கள் என பெரம்பலூரில் நடந்த விழாவில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் காசி ஆனந்தன் பெரும் கவலை தெரிவித்தார்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டகவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது, தமிழர்களின் பாரம்பரியம் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் தமிழர்கள் நாடெங்கும் வசித்து வந்தனர்.

ஆனால் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாட்டவர்களின் படையெடுப்பாலும், மொழி கலப்பாலும் தமிழர்கள் தங்கள் தற்போது தமிழலில் ஆங்கிலம் கலந்து தமிழிங்கிலீஸில் பேசிவருதை போன்று பல மொழிகள் கலந்து அசாமாகவும், பஞ்சாபியாகவும், ஹிந்தியாகவும் உருவெடுத்தது.

இதேபோன்று காலப்போக்கில் 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களாக வாழ்ந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தமிழும், பிற மொழியும் கலந்து தெலுங்காகவும் மாறியது. இதே போன்று சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் மலையாளத்தையும், கன்னடர்கள் கன்னடத்தையும் உருவாக்கினார்கள்.

50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழிங்கிலீசாக மாறப்போகிறது. இது எப்படி என்றால் டார்வின் கொள்கைப்படி மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்பதை கூறியதை போன்று குரங்கும், மனிதனும் இருக்கிறார்கள்.

ஆனால் இடைப்பட்ட காலத்திலிருந்தே பரிணாம வளர்ச்சி காணமல் போய்விட்டது. பொங்கல் விழா தமிழர்களை ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் வகையில் தமிழ் ஆண்டாகவும் கொண்டாடி வருகிறோம். ஆனால் வீடு, வாசல்களில் கல்லூரி சென்று வந்தவர்கள் வாசல்களிலும், வாழ்த்துகளை தெரிவிக்கும்போதும் ஹேப்பி பொங்கல் என்று தெரிவிக்கின்றனர்.

இது கால ஓட்டத்திற்கு நல்லதல்ல. கடந்த 3 ஆயிரத்து 800 ஆண்டுகளில் 26 மாநிலங்களிலிருந்த தமிழன் தற்போது ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் அரைகுறை தமிழனாக வசித்து வருகிறான். மீதி 25 மாநிலங்களையும் இழந்து விட்டோம். நாம் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை கணக்கில் குறைந்தேதான் வருகிறோம். வெள்ளைகாரர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது 10 ஆயிரம் சதுர மைல் உள்ள நிலப் பரப்பையும் சிங்களர்களுக்கு 15 ஆயிரம் சதுர மைல்களாக இருந்த இலங்கையை தமிழ் ஈழத்திற்கு 8 ஆயிரம் சதுர மைல்களையும், சிங்களர்களுக்கு 17 ஆயிரம் சதுர மைல்களையும் வழங்கி சென்றார்கள்.

அன்றைய கணக்குபடி (1948) 65 லட்சம் இருந்தனர். தமிழர்கள் 35 லட்சம் இருந்தனர். ஆனால் தற்போது தமிழர்கள் அதே 35 லட்சம்தான் இருக்கிறார்கள். ஆனால் சிங்களர்கள் 1.5 கோடி பேர் உள்ளனர். ஏனென்றால் தமிழர்கள் இனப்பெருக்கம் செய்யவில்லையா? இல்லை பூகம்பம், நிலநடுக்கத்தால் இறந்து விட்டார்களா? அதுவும் கிடையாது சிங்களர்கள் இனவெறி கொண்டு தாயக மக்களை சொல்ல முடியாத கொடுமை செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கி 60 ஆண்டுகளாக கொன்று குவித்து வருகிறார்கள்.

நாம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத்தான் உரிமைக்காக பேசி, பேசி தோல்வி அடைந்து சம அரசியல் உரிமை பெறவே புலிகள் போராடி வருகின்றனர். ஆனால் அமெரிக்காவில் உள்ளவர்கள் எங்களை இது ஒரு விடுதலை போராட்டம் என அறிவிக்கிறார்கள். தமிழகத்ததை 1963 ம் ஆண்டு ஜுன் 6 ம்தேதி முதல்வராக இருந்த ராஜாஜி நாங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது காங்கிரஸ்காரரான அவரே இலங்க¬யில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் பூர்வீக குடிகள்.

அவர்களுக்கு அங்கு அனைதது சம உரிமைகளும், அரசியல் ரீதியாகவும், அதிகார பகிர்வு உள்பட அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்து வழங்க வேண்டுமென அறிக்கை விடுத்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பிரதமராக இருந்த காங்கிரஸ பேரியக்கத்திற்கு தலைவராக இருந்த நட்சத்திரம் இந்திராகாந்தி அம்மையார் இலங்க¬யில் நடப்பது ஒரு இன படுகொலை.

அங்கு சம அந்தஸ்து வழங்கவும், சம பகிர்வு அளிக்கவும் இலங்கை அரசுக்கு தெரிவித்தார். ஆனால் இன்றோ மகிந்தராஜபக்ஷே ஹிட்லரை விடவும் கொடுமையாக அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் வெகு சக்தி வாய்ந்த வெடி மருந்து குண்டுகளை பயன்படுத்தி கொன்று குவித்து வருகிறான். நாங்கள் இந்தியாவிடம் உரிமையுடன் கேட்பது என்னவென்றால், பல ஆண்டுகளாக நாங்கள் உறவாடி கொண்டிருக்கும் எங்கள் நட்பு நாடாகும். நாங்கள் இந்தியாவை எதிரிகளான பாகிஸ்தானிடமோ, சீனாவிடமோ சென்று ஆயுதங்கள் வாங்கவில்லை.

போர் பயிற்சி பெறவில்லை. இந்தியா எங்கள் மீது பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளைகாரர்களிடம் காந்தி நீட்டிய அதேபோன்ற கரத்தைதான் அறத்தைதான் இந்தியாவிடம் மனிதாபிமானத்துடன் எதிர்பார்க்கிறோம். நாங்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல. எமது சொந்தகாரர்கள் அனைவரும் இந்தியர்கள்தான். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் பெண் கொடுத்துள்ளோர், எடுத்துள்ளோர் சொல்லி மாளாது. இந்திய எங்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க முன்வரவேண்டும். எங்கோ வசிக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி கிளாரி தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் அமெரிக்காவின் அதிபரானால் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவோம் என கூறுகிறார்.

இதே போல் இந்தியாவில் உள்ள எந்த கட்சிகளும் எங்களுக்கு வேண்டப்படாத கட்சிகள் அல்ல. தாயகத்திலும், தமிழகத்திலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும், ஊடகவியலார்களிடமும் நாங்கள் இருகரம் கூப்பி கேட்பது என்னவென்றால், எங்களிடம் இரக்கப்படுங்கள் என்பதுதான். புலிகள் ஆயிரம் பேர்தான் உள்ளார்கள் என மகேந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இன்று 4 ஆயிரம் சதுர மைல் கணக்கில் உள்ள விடுதலை புலிகள் 4 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பாக 35 ஆயிரம் விடுதலை புலிகள் உயிருடன்தான் பதில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம்.

இலங்க¬யில் தமிழ்ஈழம் வெல்வது உறுதி. பல லட்ச கணக்கணக்கான மக்களை பலிகொடுத்து இந்த போரை நடத்துவதற்கான அவசியம் என்ன? தமிழர்களுக்கான அங்கீகாரம் தரவில்லை. அரசியல் பகிர்வு தரவில்லை. எங்களை துள்ளத் துள்ள அழிக்கும் சிங்களர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தியா எங்களின் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டுமெ கேட்டுக் கொள்கிறோம். இன்னும் என் தாயக மக்கள் 8 ஆயிரம் சதுர மைல்களிலிருந்து 4 ஆயிரம் சதுர மைல்களாக சுருக்கப்பட்டோம்.

ஆனாலும் மொழி, மானம், இனம் காக்க இன்னும் ஆயிரம் ஆயிரம் இழப்புகளை தாங்கவும், சந்திக்கவும் தயாராகத்தான் உள்ளோம். நாங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்வது என்னவென்றால் தோழமை நாடுகள் இணைந்து மனிதாமானமின்றி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ராஜபக்ஷே கொட்டத்தை அடக்க கூறுவதுதான். எங்களிடம் இரக்கம் காட்டவில்லை என்றாலும், மனிதாபிமானத்தை காட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தாயகத்தில் தமிழர்கள் உணவின்றியும், தண்ணீரின்றியும் காடுகளில் விலங்குளைவிட கேவலமாக வாழ்ந்து வருகின்றனர்.

எங்களிடம் கருணை மட்டுமே காட்டச் சொல்கிறோம். போரில் வெல்வதை விடுதலை புலிகள் பார்த்து கொள்வார்கள். இலங்க¬யில் நடப்பது இனவெறி படுகொலை மட்டுமே தவிர வேறு எந்த இடவெறி படுகொலையல்ல. எனவே, இலங்கை தமிழர்களை பயங்கரவாதிகள் என தவறாக யாரும் புரிந்து கொள்ளவேண்டாம். இந்தியா மீண்டும் நல்முறையில் எங்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுகொண்டார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கிட்டு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

-தமிழகத்திலிருந்து தமிழ்செய்தி நிருபர்:இ.ராஜா

Comments