நாளை சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி - பழ.நெடுமாறன் அறிவிப்பு

altதமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன்சிங் 8-ந்தேதி (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.

அன்று காலை 8 மணிக்கு சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கட்சி வேறு பாடுஇன்றி தமிழர்கள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும் தடையை மீறி நாம் கறுப்புக்கொடி காட்டுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Comments