இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும் அங்கு நடக்கும் போரை நிறுத்த சொல்லி வலியுறுத்தியும் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து உண்ணாநிலை போராட்டம் நடத்திய செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று காலை 6:30 மணிக்கு காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓரளவு தெம்பாகவும் நடக்கக் கூடிய நிலையிலும் இருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர், ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுத்துள்ளனர்
கைது நடவடிக்கையை மறைத்து மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததன் பொருட்டே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கைது செய்யும் போது புகைப்படமோ, வீடியோவோ எடுத்து விட முடியாத நிலையில் தடுத்துள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை நடிகர் வடிவேலு, இயக்குனர்கள் சுந்தர்.சி, மனோபாலா, ஆர்.கே.செல்வமணி, சரவண சுப்பையா, கவுதம் ஆகியோர் கறுப்பு சட்டை அணிந்த படி ஊர்வலமாக, மருத்துவமனைக்கு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 4 மாணவர்களிடம் உடல் நலம் விசாரித்தனர். பின்னர் அங்கிருந்து உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்றார்கள். அங்கு உண்ணாவிரதம் இருந்து வரும் 8 மாணவர்களிடமும், உண்ணாவிரதத்தை நிறுத்தும் படி கேட்டனர்.
அதற்கு அவர்கள், “யார் சொன்னாலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எங்களை போன்ற மாணவர்கள் வேறு யாராவது, இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே, போராட்டத்தை கை விடுவோம்” என்று கூறினார்கள்.
பின்னர் நடிகர் வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், “இலங்கையில் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை பாராட்டுகிறேன். அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி. கூறுகையில், “மாணவர்கள் 6 நாட்களாக பட்டினி கிடந்து போராடுவதை நினைத்தால் நெஞ்சம் கொதிக்குது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்” என்றார்.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களில் ஒருவர் இறந்தால் கூட, நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஒட்டு மொத்த திரை உலகமே, களத்தில் இறங்கி போராடும்” என்று கூறினார்.
இதேவேளை, ஏராளமான அரசியல் பிரமுகர்களும் உண்ணாவிரதத்திற்கு நேரில் வந்து தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில்,
இது தான் காந்தி தேசமோ
இது வல்லோ ஜனநாயகம்
வாழ்க காந்தி
வாழக காந்திசம்
பாவம் தமிழர்கள்
இப்படி இந்தியாவில் இந்தியர்கள் என்று மார்தட்டி வாழ்வதிலும் பார்க்க .....
ஈழத்தில் செல் அடியில் வாழலாம் ................

தற்போது காவல்துறையினரால் இவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்
தொடர்புபட்ட செய்தி
இலங்கைப் படுகொலை வீடு-கடைகளில் கருப்புக் கொடி ஏற்றம்
திருச்சி: இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, திருச்சியில் வீடு, கடைகளில் நேற்று கருப்புக் கொடி ஏற்றி துக்க தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இது தான் காந்தி தேசமோ

Comments