பரந்தன் புதுக்குடியிருப்பு பிரதான வீதியின் ஓரங்களில் கனரக பாரவூர்திகள், களஞ்சியப் பெட்டிகளைத் தரித்து வைத்திருப்பதால் இவ்வீதியால் இடம்பெயர்ந்து பயணிப்போர், உடமைகளை ஊர்திகளில் கொண்டு செல்வதில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பாவனையிலுள்ள ஒரு பிரதான வீதியின் கரையோரங்களில் களஞ்சியப் பெட்டிகள், கனரக ஊர்திகள் தரித்து நிற்பதாலும் மற்றும் இவ்வீதியிலுள்ள அங்காடி விற்பனை நிலையங்கள் முன்னாலும் ஊர்திகள் தரித்துவிடப்படுவதாலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறு தரித்து விடப்படுவதால் தருமபுரம் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தமது உடமைகளை ஏற்றிவரும் ஊர்திகளை தமது தற்காலிக இடங்களிற்கு வந்து சேர்வதில் பெரும்நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். வீதிகளில் தரித்து நிற்கும் ஊர்திகளை விலகிச் செல்வதற்காக வீதியின் ஓரங்களுக்கு ஊர்திகளைச் சுமையுடன் ஓட்டிச்செல்லும் போது அவ்வூர்தி மண்ணுள் புதையுண்டு போகின்றது. இதனால் பலமணி நேரம் பயணத்திற்காகக் காத்திருக்கவேண்டி ஏற்படுவதுடன் மக்கள் மேலும் மேலும் மனதளவில் பாதிப்படைந்தும் வருகின்றனர். தற்போது பெய்த மழை காரணமாக வீதிகள் பெரும் சேதமடைந்துள்ளது.
(www.tamilkathir.com)
Comments