போராடினால் வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் வரும் சாவு.

விடுதலைப்போரின் இன்றைய களயதார்த்தத்தை நாம் ஒவ்வொருவரும் விளங்கிக் கொண்டிருக்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அற்புதங்கள் நடக்குமென்றோ, பெரிய மாற்றம் வரப்போகுது என்றோ கற்பனையில் மூழ்கியிருந்தால் அல்லது அவ்வாறான வறட்டு நம்பிக்கையில் திளைத்திருந்தால் எல்லோருக்கும் சாவுதான் வரும். அதுவும் வெகுவிரைவில்.

இயக்கம் போராடட்டும், வீரச்சாவடையட்டும், விழும்புண் அடையட்டும் நாம் பாதுகாப்பாக எவ்வளவு இடமென்றாலும் ஒடி ஒடி ஒளிந்து வாழலாம் என்ற சுயநலநினைப்பே இன்றைய சூழ்நிலைக்கு காரணம். ஓவ்வொருவரும் தான் தான் தப்பலாம் என்று நினைத்தபடியால்தான் 60 இலட்சம் யூதர்கள் செத்து மடிந்தார்கள். தனக்கு பிரச்சனையில்லை மற்றவர்களுக்குத்தான் பிரச்சனை என்று நம்பி ஒவ்வொருவரும் ஒடி ஒளிந்தமையாலேயே 9 இலட்சம் டுட்சிகள் ருவாண்டாவில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நினைப்பு வன்னியில் இருக்கும்வரைக்கும் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். இதனை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

உலகம் தட்டிக் கேட்கும், போரை நிறுத்தும், உதவிகள் செய்யும் என்று தயவுசெய்து யாரும் நம்பிவிடாதீர்கள். இதுவரையில் உலகில் நடந்த அனைத்து இனப்படுகொலைகளுக்கும் உலகம் மௌனசாட்சியாகவே இருந்திருக்கின்றது. வன்னியிலுள்ள நான்கரை இலட்சம் மக்களும் சிங்களபௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட பின்னரே சர்வதேச சமூகம் மூக்கைச்சீறியபடி வரும். விசாரணைக் கமிசனை வைத்து பிணக்கணக்கெடுப்பு நடத்தும்.

எல்லாம் முடிந்த பின்பு வந்து என்ன பயன்? தமிழகத்தில் 7 கோடித்தமிழர்களும் எல்லாப்போராட்டங்களும் செய்து பார்த்தார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலிருந்து பட்டினிப்போராட்டம் வரை அனைவற்றையும் உணர்வோடு செய்தார்கள். இந்திய மத்திய அரசு கணக்கெடுத்ததா தமிழகத்தை? இல்லை! ஏனென்றால் இந்த யுத்தத்தை சிறிலங்காவுடன் சேர்ந்து நடத்துவதே இந்தியாதான் என்ற கசப்பான உண்மையை எல்லோரும் காலதாமதமாகவே விளங்கிக் கொண்டார்கள்.

ஓவ்வொரு தமிழனும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் அனைத்து நாடுகளிலும் எல்லாவிதமான போராட்டங்களும் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இன்னமும் சோராமால் கடும்பனிக்குள்ளும், குளிருக்குள்ளும் சகலவிதமான போராட்டங்களையும் சளைக்கமால் செய்து வருகின்றார்கள். ஜேர்மனி மட்டும் அனுதாபம் காட்டியது. வேறு ஒருவரும் கண்திறந்து பார்க்கின்றார்கள் இல்லை. சமாதான அனுசரணையாக இருந்த நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் மௌனமாக இருந்து இந்த இனப்படுகொலையை ஆதரிக்கின்றன. ஜப்பான் சிறிலங்காவிற்கு போதுமான பொருளாதார உதவிகளை செய்து அதனை தாங்கிப்பிடித்து வருகின்றது. இது தான் இன்றைய உலகநிலை.

காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்த போது உலகமே அணி திரண்டு கண்டித்தது. ஜ.நா.சபை எத்தனையோ தடவைகள் அவசரமாக கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றியது. பான்கீமூன் மத்தியகிழக்கிற்கு பறந்து திரிந்தார். நவநீதம்பிள்ளை கண்டன அறிக்கைகளை கடுமையாக வெளியிட்டார். ஏனெனில் பலம் மிகுந்த அரபுநாடுகளை பகைக்கமுடியாது. இறுதியில் யுத்தம் நின்றது.காசாவுக்கு ஒரு நீதி வன்னிக்கு ஒரு நீதி என்றாயிற்று. ஜ.நா சபையும் மனிதஉரிமைகள் ஆணையகமும், இணைத்தலைமை நாடுகளும் வன்னியில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் பிணக்கணக்கெடுப்பு நடத்தி அனுதாபம் தெரிவிக்க காத்திருக்கின்றார்கள். ஏனெனில் தமிழனிடம் பலம் இல்லை. போராடி வலிமையாக இருந்தால் வருவார்கள். இல்லாவிட்டால் சாவுக்கணக்கெடுப்புக்கு மட்டும் வருவார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வது போல "வலியவன் வாழ்வான்" என்பது தான் உலக நீதி.

நாம் ஒவ்வொருவரும் தேட்டங்களைத் தேடி, குடும்பத்தை வளர்த்து எதிர்கால கற்பனைகளில் மூழ்கி சுயநலச்சிந்தனையுடனே இன்னும் செயற்பாடுகின்றோம். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு போர் எமது வாசல்தேடி வந்த போதும் தப்பலாம் என்ற சுயநலத்துடன் நாம் ஒடி ஒடி ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இயக்கம் போராடும் என்ற மனப்பாங்குடன் நாம் பதுங்கிக் கொள்கின்றோம். போராடாமால் சுயநலத்துடன் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடி கண்டுபிடிக்கின்றோம். ஆனால் போராடாவிட்டால் வீடு தேடி வரும் சாவை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் யதார்த்தம்.

இன்று இந்தக்கணமே போராடவலுவுள்ள அனைவரும் போராட்டத்தில் இணையாவிட்டால் வன்னிமக்களை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அன்பானவர்களே இந்தக்கட்டுரையை வாசித்துவிட்டு இடிந்துபோய் இருக்காதீர்கள். அற்புதம் உங்களிடம் தான் இருக்கின்றது. பெரிய மாற்றத்தை உங்களால் மட்டும் மட்டும் செய்யமுடியும்.

மிழனின் வெற்றியும், தோல்வியும் வாழ்வும் சாவும் உங்களிடம் மட்டுமே இருக்கின்றது. இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப்போவது சர்வதேச சமுகமோ, இந்தியாவோ, மகிந்த இராஜபக்சவோ அல்ல. வன்னி மக்கள் மட்டும்தான். நீங்கள் மட்டும்தான் தீர்மானிக்கலாம்.

கிட்லரின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து சோவியத்யூனியனில் வலுவுள்ள அனைவரும் போர்க்களம் சென்றார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் வயதானவர்கள், ஏலாதவர்கள் மட்டுமே இருந்தார்கள். போராடப்பயந்த கோழைகளை சமுகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தண்டனைக் கைதிகளாக முன்னரங்கிற்கு அனுப்பினார்கள்.

ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து வலுவுள்ள அனைவரும் போராடினார்கள். இறுதியில் வெற்றியடைந்தார்கள். இன்று சுதந்திரத்தை சுவாசிக்கின்றார்கள். நிம்மதியான செல்வச் செழிப்பான வாழ்வை வாழ்கின்றார்கள். அவர்கள் போராடி பெற்ற வாழ்வில் வாழ நாம் இங்கிருந்து போராடமால் போக நினைப்பதுதான் எமது தவறு. போராடினால் அதே சுதந்திரமான நிம்மதியான வாழ்வை நாம் இங்கேயே அமைக்க முடியும்.

4ம் கட்ட ஈழப்போரில் சிங்களப்படைகள் என்றுமில்லதவாறு இழப்புக்களை சந்திந்திருக்கின்றன. அப்படைகளில் 15000 மேல் கொல்லப்பட்டும், 25000 மேல் காயமடைந்துமுள்ளனர். வெற்றியை நோக்கி போறதாக நினைத்து சிங்களப்படை இவ்வளவு இழப்புக்களையும் பல்லைக்கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டிருக்கின்றது.

போரின் சுமையால் சிறிலங்காவின் பொருளாதரம் திடீரெனக் கவிழும் நிலை. இராஜபக்ச சகோதரர்களின் சர்வாதிகாரமும் ஆதிகார ஆணவமும் உலகநாடுகளிடமும் தென்னிலங்கையிலும் அதிருப்தியடைந்த நிலை. யுத்தவெற்றி ஒன்றுதான் சிறிலங்காவை இவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளும் தாங்கி வைத்திருக்கின்றது.

சிங்களப்படைக்கு மரண அடி கொடுத்தால் எல்லாம் தலைகீழாக போய்விடும். ஆனால் யார் அந்த மரண அடி கொடுப்பது?

மன்னாரில் தொடங்கி முல்லைத்தீவுவரை ஒவ்வொரு கிராமமும், நகரமும் போராளிகள் பற்றக்குறையால் விடுபட்டதே தவிர எதிரி அடித்துப்பிடிக்கவில்லை.

ஓவ்வொருமுறையும் ஆட்பற்றாக்குறை என்று வரும் போதும் நாம் சட்டைசெய்யவில்லை. விருப்பமில்லமாலே வீட்டுக்கு ஒருவரை அனுப்பிவிட்டு ஏனையோர் சுயநலத்துடன் இருந்தோம். இப்போது ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெரியுண்டு போக இடம் இல்லாமல் இருந்த போதும் போராட சிந்திக்கவில்லை. இதுதான் நாம் இதுவரை விட்ட தவறு. வரலாறு இறுதியாக எமக்கொரு சந்தர்ப்பம் தந்துள்ளது.

இதுவே இறுதிச் சந்தர்ப்பம்.

வன்னியிலுள்ள போராட வலுவுள்ள அனைவரும் போராளிகளாக திரண்டெழுந்தால் அற்புதம் நடக்கும். எரிமலை வெடிக்கும். இன்றுள்ள நிலைமை தலைகீழாக மாறும். இன்று உடனடியாக 1000 பேர் போராளியாகினால் இன்றுள்ள எல்லையைத் தாண்டி சிங்களப்படை ஒரடி முன்வைக்க ஏலாது.

3000 பேர் உடனடியாக சேர்ந்தால் கிளிநொச்சி மீட்கப்படும். 5000 பேர் சேர்ந்தால் வன்னிமுழுக்க மீட்கப்படும். 15000 பேர் சேர்ந்தால் தமிழீழம் சுதந்திரமடையும். இதுதான் யதார்த்தம்.

இதுதான் வரலாறு எமக்கு தரும் கடைசி சந்தர்ப்பம். மற்றவர்கள் போராட்டும் என்று நீங்கள் நினைத்தால் விரைவில் சாவு தேடி வந்து சந்திக்கும். நீங்களே போராளியாகினால் வாழ்வு தேடிவரும்.

விடுதலைகிட்டும். இவ்வளவு காலமும் தோளில் சுமந்த துன்பச்சுமை நீங்கும். ஓவ்வொரு தமிழனும் தத்தம் கிராமங்களில், நகரங்களில், தமது வீடுகளில் நிம்மதியான, சுதந்திரமாக வாழலாம். தமிழீழ தேசம் மலரும். இது உறுதி.


-வீமன்-
www.tamilkathir.com


Comments