அனைத்துலக சமூகம் அங்கீகரித்தால் மட்டுமே இன மோதுகை தணிப்பு சாத்தியமாகும்: அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு

இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகார மையத்தினை அனைத்துலக சமூகம் அங்கீகரித்தால் மட்டுமே இன மோதுகை தணிப்பு சாத்தியமாகும் என சுவிற்சர்லாந்து ஜெனீவாவை தளமாகக்கொண்ட அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

அரசியல் தீர்வு நோக்கி சிறிலங்கா அரசாங்கம் பயணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அனைத்துலக சமூகம் சமீப நாட்களாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களினை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பானது அவதானித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள அந்த அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய நிர்வாக தலைமையகமான கிளிநொச்சியினை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் விரிவான அறிக்கையினை படிக்க இங்கே அழுத்தவும்







Comments