கிளிநொச்சியின் பின்புலம்,,,,,



கிளிநொச்சியின் பின்புலம்

பீஷ்மர்

கி.முகி.பி என்ற சொற்குறுக்கீடுகளுக்கு கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்ற கருத்து இல்லாமல் கிளிநொச்சியின் முன்னர், கிளிநொச்சியின் பின்னர் என்று கொள்ளும் அளவிற்கு அரசாங்கம் கிளிநொச்சியில் ஈட்டியுள்ள வெற்றி மிகப்பெரிய தசிய வெற்றியாக பாற்றப்படுகின்றது. கிளிநொச்சியில் அரசாங்கப் படைகள் ஈட்டிய வெற்றி எதிர்வரும் திங்கட்கிழமை அன்று (நாளை) ஒரு தசிய பெருவிழாவாக அரசாங்க ஸ்தாபனங்கள் யாவற்றிலும் கொண்டாடப்பெற உள்ளது.

இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் அரச படைகள் ஈட்டியுள்ள மிகப் பெரிய வெற்றியாக இது பாற்றப்படுகின்றது. இவ் வெற்றியானது படைவீரர்களால் ஈட்டப்பட்ட பெரு வெற்றி எனவும் அதனால் அவர்களைப் பாற்றுவது கடமை என்றும் ஒட்டுமொத்தமாக பசப்படுகின்றது. அரசியல் விமர்சகர்கள் சிலர் இன்னும் கைப்பற்றப்படாத முல்லைத்தீவை இணைத்துப் பசுகின்றனர். எனினும் கிளிநொச்சியின் பின்னர் முல்லைத்தீவு வெற்றி 36 மணித்தியாலங்களுக்குள் ஈட்டிக்கொள்ளக்கூடியது என அரசபடைத் தலைவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் ஈட்டப்பெற்ற வெற்றிக்கான முக்கியத்துவத்தை அரசாங்கம் எவ்வாறு நாக்குகின்றது என்பது கவனிக்கப்படவண்டியது. ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக கிளிநொச்சிய விடுதலைப் புலிகளின் தளமையமாக விளங்கி வந்தது. அவர்களது நிர்வாக நிறுவனங்கள் யாவும் கிளிநொச்சியைய பிரதான இடமாகக் கொண்டிருந்தது. கல்வி முதல் பொருளாதார நடவடிக்கைகள் வரை சகல துறைகளுக்கும் கிளிநொச்சிய மையமாக விளங்கிற்று. கிளிநொச்சியில ஏறத்தாழ சுகபினெற் (மந்திரி சபை) தொழிற்பட்டது என்று அரசியல், கல்வி, பண்பாடு, மீள்வாழ்வு ஆகிய துறைகள் அங்கு கவனிக்கப்பட்டு வந்தன. ஏறத்தாழ கால் நூற்றாண்டுகாலமாக அது ஒரு தனி அலகாக தொழிற்பட்டு வந்ததெனலாம்.

கொழும்பில் இருந்து சில இராஜதந்திர அலுவலர்கள் கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்து வருவது வழக்கமாக இருந்தது. தமிழ்ச்செல்வன அரசியல் பிரிவினதும், நிர்வாகப் பிரிவினதும் பொறுப்பாக கடமையாற்றி வந்தார். பேச்சுவார்த்தைகள் யாவும் அவருடனேயே நடைபெற்றன.

இப்பொழுது கிளிநொச்சியில் இருந்து விடுதலைப் புலிகள் பின் நகர்ந்துள்ளமை அரச படைகள் அங்கு தமது ஆதிக்கத்தை நிறுவக் காரணமாயிற்று. இந்தப் பின்நகர்வு யுத்தம் எதுவுமில்லாமல் நடைபெற்றுள்ள ஒன்று.

இந்த சம்பவத்தை காயுதல் உவத்தலின்றி ஒரு யுத்த நிகழ்ச்சி தொகுதியாக நாக்கும் பாது அரசாங்க நிலைப்பாட்டில் நியாயமுள்ளது. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் அப்பிரதசத்திற்கான இறமைக்கும் அதற்கான அதிகாரத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருந்த ஒரு எதிர்க்குழுமம் அந்த நிலையிலிருந்து பின்நகர்ந்துள்ளமையை வேறுவிதமாக எடுத்துக்கூறுவது சிரமமாக இருக்கும்.

இது இந்தப் பிரச்சினையின் அடித்தளமான அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுகிறதா என்பது ஒரு முக்கியமான வினாவாகும். அதற்கும் மலாக விடுதலைப் புலிகள் பான்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் எவ்வாறு நில ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது என்பது ஒரு முக்கியமான வினாவாகும். ஏனெனில் பிரமதாசா ஜனாதிபதியாக இருந்த பாது அவர் விடுதலைப் புலிகளுக்கு படைநிலை உதவிகளுக்கு வேண்டியவற்றைச் செய்தார் என்று இன்னும் கூறப்படுகின்றது. தொடர்ந்து இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டதென்பதை அறிதல் அவசியமாகிறது.

அவ்வாறு பின்நோக்கிப் போகும் போது வட கிழக்கிற்கு குறிப்பாக வடக்கிற்கு இந்தியாவின் சமாதானப் பணுகைக்கான இந்தியப் படைகளின் வருகை பற்றிப் பேசுதல் வேண்டும். ஜே.ஆர்.ஜெயவர்தனா மிகுந்த அரசியல் தந்திர உணர்வுகள் இந்தா இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் அமைதியைப் பணுவதற்காக இந்தியப் படையினரின் வருகையை அனுமதித்தார்.

அவர்கள் வந்து தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர். குடிநிலை (சிவில்) நிர்வாக விடயங்களுக்குக் கூட பிரிகடியர் காலானிடம் அனுமதி வாங்கவண்டிய ஒரு நிலைமை யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால் வெகுவிரைவில் இந்திய சமாதான காப்புப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடைய கருத்துவறுபாடுகள் ஏற்பட்டு வரன்முறையான யுத்தம் தொடர்கின்றது. இந்தக் காலகட்டத்தில அதிகாரத்திற்கு வந்த பிரமதாசா இந்தியா சமாதானப்படைகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவிகள் செய்தார் என்று கூறப்படுகின்றது.

1990 இல் இந்தியாவில் வி.பி.சிங் அரசாங்கத்தின் வருகையுடன் இந்திய சமாதானப் படை மீள அழைக்கப்பெற்றது. வடக்கில் இந்திய சமாதானப்படை தொழிற்பட்டபொழுது சிற்சில இடங்களில் மாத்திரம் இருந்த இலங்கை இராணுவத்தினர் அவ்வவ்விடயங்களிலய எவ்வித செயற்பாடுகளின்றியும் இருந்தனர். அந்த வளையில் மிக சுவாரஸ்யமான நிலைமை ஏற்பட்டது. படையினரும், பிரதச மக்களும் சில இடங்களில் விடுதலைப் புலிகளின் பகைமை உறவு இல்லாமல் தொழிற்பட்டனர். இந்திய சமாதானப்படை வாபஸ் பெறப்பட்டதை மக்கள் பெரிதும் விரும்பினர்.

அந்தக் காலகட்டத்தில தான் இலங்கைப் பாதுகாப்பு உத்தியாகத்தர்களுக்கும் பொலிஸ்படை தமிழ்த் தரப்பினர்களுக்குமிடைய நல்லுறவு காணப்பட்டது. இந்திய அமைதிப் படையினர் திடீரெனெ வாபஸ் பெறப்பட்டன. அவ்வாறு வாபஸ் பெற்ற பொழுது அங்கு ஒரு அதிகார வெற்றிடம் ((BACWM) ஏற்பட்டது. அப்பொழுது அந்த இடத்தை விடுதலைப் புலிகள் தமதாக்கிக் கொண்டன.

இதில் இன்னொரு சுவாரஸ்யமுண்டு. மற்றைய உரிமைப்பாராட்ட இயக்கவரலாற்றில் காணப்படாத ஒரு முறையில் பிரதானமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க நிறுவனங்கள் தொடர்ந்து இருக்கும் அத வளையில் விடுதலைப் புலிகள் பிரதச அதிகாரமுடையவர்களாக விளங்கினர். உண்மையில் பிரதச அதிகார அதிகாரிகள் தத்தம் துறைகளுக்கான விடுதலைப்புலிகளின் பிரதிநிதியிடம் இணைந்து தொழிற்பட்டனர். அதன் பின்னர் மீண்டும் நிலைமை மாறிப் படையினர் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமது அதிகாரத்தை மீள நிறுவினர். ஆனால் நிஜநிலையில் இரட்டை அதிகாரம் ஒன்று இருந்தது என்ற கூறவண்டும். பொறுப்பான அரசபதவிகளில் இருந்தவர்கள் நிலமையை நன்கு பணி வந்தனர். பின்னர் பரந்தன் கிளிநொச்சிப் பகுதியில் தமது அதிகாரத்தை நிலைநாட்டிப் பணி வந்தனர். விடுதலைப் புலிகளின் ஆதிக்கப் பிரதேசம் வன்னி என்று சொல்லப்பட்டாலும் ஓமந்தைக்கு சற்று வடக்க இருந்த அவர்கள் பொறுப்பாக இருந்தனர்.

மேலே கூறியபடி இரட்டை அதிகார நிலை இருந்து வந்தது என்றாலும் காலக்கிரமத்தில் அது மிகச் சுமுகமாக நடைபெற்றது. இந்தப் பின்புலத்தில தான் விடுதலைப் புலிகள் தங்கள் மையத்தளமாக கிளிநொச்சியைக் கொண்டனர். கிளிநொச்சியில அவர்களது காவற்பிரிவு அரசியல் பிரிவு பொருளியற் பிரிவு கலை பண்பாட்டுப் பிரிவு ஆகியன தொழிற்பட்டு வந்தன. யாழ்ப்பாண தீபகற்பம் அரச படையின் ஆதிக்கத்திற்குள்ளய வந்தது. வன்னி நிலைவரம் வறுபட்டதாக இருந்தது. கிளிநொச்சிப் புலிகளின் செயற்பாட்டுத் தளமாக விளங்கிற்று. இப்பொழுது குறிப்பாக அரச படையினரின் உந்துதல் காரணமாக படை அதிகாரத்தையும் ஆட்சியையும் மீள நிலைநிறுத்தும் நடைமுறை ஏற்பட்டது. அதன் காரணமாக படை அணிகள் சிலர் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நாக்கி முன்னறினர். படைத்தளபதி அவர்கள் இவ் உட்செல்லுகை மூன்று திசைகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டது என்றார். அவ்வாறு படையினர் மற்சென்ற போது விடுதலைப் புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்நகர்ந்துள்ளனர் என்று தெரிகின்றது. அவர்கள் எங்கு சென்றார்கள். சென்ற இடத்தில் தமது அதிகாரத்தை எவ்வாறு நிலைநிறுத்துவார்கள் என்பது பற்றிய தெளிவு இல்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் புதிய அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் தாம் மீண்டும் கெரில்லா யுத்த முறைக்குச் செல்ல வண்டி வரும், செல்வதாகக் கூறினர் என்று செய்திகள் வெளியாகின.

மிகச்சுருக்கமாக சொன்னால் எந்த ஒரு யுத்த நிகழ்வும் இல்லாமல் இந்தப் போட்டா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருடத்து மாவீரர் தினத்தின்பொழுது விடுத்த அறிக்கையுடன் இணைத்துப்பார்க்க வேண்டுவது அவசியமாகிறது. இந்தியாவுடனான நல்லுறவை மீட்பதும், தமிழகத்து நல்லுறவை வளர்ப்பதும் சர்வதேச கணிப்பில் தாம் ஒரு உரிமைப் போராட்ட இயக்கமாக கணிக்கப்படவண்டுமென்றும் அதில வற்புறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பின்புலத்தில தான் இந்த பின்நகர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முல்லைத்தீவு இப்பொழுதும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திற்குள்ளய உள்ளது. இது ஒரு முக்கியமான விடயமென்பதை தென்னிலங்கையின் அரசியல் விமர்சகர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்தப் பின்புலத்திலய கிளிநொச்சியில் நடந்த விடுதலைப் புலிகளின் பின்நகர்வைப் பார்த்தல் அவசியமாகும். இந்தப் பின்நகர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் ஏறத்தாழ அண்மைக்காலம் வரை யுத்த நிலை வெற்றி ஈட்டங்களைய அல்லது அத்தகைய வெற்றி ஈட்டங்கள் மூலம தமது அரசியல் நிலைப்பாட்டைப் பணி வந்தன. அடுத்து என்ன நடக்கும் என்பது மிக முக்கியமான வினாவாகும். ஏனெனில் விடுதலைப் புலிகளின் பின்நகர்வாடு அரசாங்கத்துக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று இப்பகுதியின் படைஅதிகாரத்தைப் பணிக்கொள்ளல், அடுத்தது இது மிக முக்கியமானது. இலங்கைத் தமிழ் பிரச்சினை தீர்விற்கான அரசியல் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்குவது முக்கியமான ஒன்றாகும்.

சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை. ....


Comments