ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தவர்களுக்கு நடக்கும் கொடூரம் - 28 பெண்கள் படுகொலை

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்களுக்கு நடக்கின்ற கொடூரங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு நடக்கும் கொடூரம் வார்த்தைகளால் சொல்ல முடியா அளவிற்கு இருக்கின்றது.

இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 28 பெண்கள் கொடூரமான சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என உறுதியாகத் தெரியவருகின்றது.

வன்னியில் இருந்த அரச கட்டுப்பாட்டப்பகதிகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் வவனியாவில் அகதிகள் முகாம் எனும் பெயரில் போட்டு இராணுவத்தினரால் சிறைப்பிடிக்க்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே. குறித்த அகதிகள் முகாமில் மக்கள் பாரிய பிரச்சனைகளையும் கொடுமைகளையும் அம் மக்கள் அனுபவித்து வருவதாக ஓர் முக்கிய தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக அம்மக்களது மனோநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நடைபெறும் சித்திரைவதைகளை எவரிடம் முறையிடுவது எனத் தெரியாத நிலையிலும் அவர்கள் தவிப்பதாக தெரியவருகின்றது.

அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெண்கள் மிகவும் துன்ப்பப்படுவதாகவும் அத்தகவல் மூலம் அறியக்சுடியதாகவுள்ளது. கடந்த இரு வாரங்களுக்குள் சுமார் 28 பெண்கள் கொலை செய்யப்பட்டள்ளனர்.

அங்கு என்ன நடக்கின்றது?


காட்டு மிராண்டித்தனமாக கொலை வெறியுடன் தாண்டவம் ஆடும் சிங்கள இராணுவம் பெண்கள் மீது குறிவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்கின்றனர். பிள்ளைகளைப் பிரசவித்த பச்சிளம் உடலையுடைய தாய்மாரும் இந்த காமவெறிக் கூத்துக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

இரவு வேளைகளில் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்படும் பெண்களுக்கு இந்த நிலைமை ஏற்படுகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருகைதரும் வேளையில் பலர் அவர்களது வெறிக் கூத்திற்கு இரையாகின்றனர்.

பின்னர் முகாங்களில் மிகுதி வேட்டை நடைபெறுகின்றது. அண்மையில் இவ்வாறான வெறியாட்டத்தினால் கொலையண்ட சுமார் 24 தமிழ் இளம் பெண்களும் அதன் பின்னர் பிறிதொரு இடத்தில் 4 தமிழ் பெண்கள் என சுமார் 28 தமிழ் பெண்கள் அனுராதபுர ஒதுகடகுப் புறப்பகுதிகளில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாழ் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா இருந்த காலப் பகுதியிலேயே பாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பொன்சேகாதான் முழு இராணுவத்திற்கும் தற்சயமம் தளபதி என்பது அனைவரும் அறிந்ததே.


Comments