வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரில் இன்றும் எறிகணைத் தாக்குதல்களில் 35 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் மாலை 5:30 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 35 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
தொடர்புபட்ட செய்தி:
Ø வன்னியில் தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: நேற்றிரவு 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை
Comments