ஒரு நாளில் 5000 எறிகணைகள் தமிழர்கள் மீது சிறிலங்கா வீசியது

நேற்று திங்கள்கிழமை மட்டும் 5000 எறிகணைகளை சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது வீசியுள்ளது. அதுவும் சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே இவை பெருமளிவில் விழுந்து வெடித்துள்ளன.

மிகக் குறுகிய பகுதியில் வாழும் மக்கள் மீது அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் எறிகணைகள் மூலம் மழைபோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனைகள், ஆலயங்கள் சேதமடைந்ததுடன் அகதிகள் தங்கியிருக்கும் பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தது.

இதன்போது நூறு வரையான மக்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் தொடர்பாக உடனடியாக விபரங்கள் எதனையும் பெறமுடியவில்லை.

இந்த எறிகணைகளால் தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு பகுதிகள் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன.

மருத்துவமனைகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு மருத்துவ தாதி உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.



Comments