சுதந்திரபுரத்தில் ஒரே நாளில் 52 பொதுமக்கள் பலி: ஐ.நா.

வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யார் இதற்கு பொறுப்பு என்பது தொடர்பாகவும் எத்தனை எறிகணைகள் ஏவப்பட்டன என்பது தொடர்பான விபரங்களும் எமக்கு தெரியாது.

ஆனால், இந்த அறிக்கை எம்மால் தயாரிக்கப்பட்டது.

மேலும் 16 மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை மற்றும் கொத்து குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னி பிரதேசத்தில் இயங்கிய ஒரே ஒரு மருத்துவமனையில் இருந்த நோயாளர்களும் மக்களும் நேற்று காலை வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.



Comments