உலகத் தமிழர்களே ஒரு நிமிடம்! இயன்றதைச் செய்வோம். இன்றே செய்வோம்

உலகத் தமிழர்களது வரலாற்றில் மிகவும் கடினமான துயரங்கள் தோய்ந்த இரத்தத்தில் நனைந்த ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஈழத்திலே அப்பாவித் தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ஆட்டிலெறித் தாக்குதல் களிலும் வான் குண்டுத் தாக்குதல்களிலும் தின மும் பலர் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்படுகிறார்கள்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண் டிய வைத்தியசாலைகளைக் கூட ‘இராணுவ இலக் கு’ என்று சொல்லித் தாக்கும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. யுத்த தர்மம், மனித தர்மம் என்ற எதனையும் அறிந்திராத, எதனையும் மதிக் காத ஒரு கொடூரமான ஆட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அராஜகங்களையும் கொடூரங்களையும் கண்டு உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் (ஒட்டுக்குழுக்களையும் அரச கதிரைக்காக வேட்டியையும் இழக்கத் துணிந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும் தவிர) கொதித்துப் போயிருக்கிறார்கள்.

தமது உறவுகளை அவலச் சாவிலிருந்து காக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் விளைவாக புலம் பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆர்ப் பாட்டப் பேரணிகள், மனிதச் சங்கிலிப் போராட் டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் எனப் பலவகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் வயது வித்தியாசமின்றி ஒன்று திரண்டு சிங்க ளத்தின் இன அழிப்புக்கு எதிரான கோசங்களையும் அந்த இன அழிப்பைக் கண்டும் காணாமலும் இருக் கும் சர்வதேச நாடுகளைக் கண்திறக்கக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
ஆனாலும் கடந்த சில தினங்களாக இது தொடர் பாக நடத்தப்படும் போராட்டங்களின் எண்ணிக்கை யிலும் அதில் கலந்து கொள்பவர்களின் தொகையி லும் இந்தப் போராட்டங்களுக்கு ஊடகங்கள் வழங்கும் பிரச்சாரத்தின் அளவிலும் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கின்றது.

தமது போராட்டங்களின் பின்பும் கண் திறக்க வேண்டியவர்களின் கண்கள் மூடப்பட்டே இருக் கின்றதே என்ற ஆதங்கமும் தமது போராட் டங்களும் உழைப்பும் விழலுக்கிறைத்த நீராகி விட்டனவே என்ற வெறுப்பும் தமது நியாய பூர்வமான கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்ற அவ நம்பிக்கையுமே இதற்கான காரணம் என்று தெரி கின்றது. நாங்கள் கையாலாகாதவர்களாகி விட் டோமே, எங்கள் மக்களைக் காக்க எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஆதங் கப்படுபவர்களே!

உங்களுக்காக ஒரு குட்டிக் கதை


ஒரு காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீ எங்கும் பரவி பெரும் நாசத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தருணத்தில் அங்கு வாழ்ந்து வந்த மிருகங்கம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் அந்தக் காட்டி லிருந்து அவசரமாக வெளியே வந்தன. ஓடி வந்த மிருகங்கம் அனைத்தும் காட்டிற்கு வெளியில் நின்று கொண்டன. தீயை அணைக்கும் முயற் சியையோ தாம் வாழ்ந்த காட்டை காப்பாற்றும் எண்ணத்தையோ அவை கொண்டிருக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அங்கு ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுப்படுத்துவது என்பது தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணமேயாகும்.

ஆனால் அங்கிருந்த பாடும் பறவையொன்று மட் டும் உடனடியாகச் செயற்பட ஆரம்பித்தது. அது அருகிலிருந்து குளம் ஒன்றுக்குச் சென்று அங்கி ருந்து தன்னால் எடுத்து வர முடிந்த ஒரு துளி நீரை உதடுகளால் எடுத்து வந்து கொழுந்து விட் டெரிந்து கொண்டிருந்த அந்தக் காட்டுத் தீயின் மீது ஊற்றியது. தனது முயற்சியில் சற்றும் தள ராது அந்த தொடர்ந்து குளத்திற்கும் காட்டுக்கு மாகப் பறந்து பறந்து நீரினை விசிறிக் கொண்டி ருந்தது.

இந்தப் பாடும் பறவையின் செயலை அங்கு கூடியி ருந்த மற்றைய உயிரினங்கம் ஏளனம் செய்தன. அதனுடைய முயற்சியை விழலுக்கிறைத்த நீர் எனக் கூறி எள்ளி நகையாடின. யானை, சிங்கம், புலி உள்ளிட்ட இந்தப் பெரிய மிருகங்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாது அந்தச் சிறிய பற வை தன்னுடைய நடவடிக்கையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது.

பலம் வாய்ந்த தம்மைப் போன்ற மிருகங்களே எதுவும் செய்ய முடியாது என உணர்ந்து மௌ னித்து இருக்கும் போது இந்தச் சிறிய பறவையால் எதனைச் சாதித்து விட முடியும் எனத் தொடர்ந்து ஏளனம் செய்த அந்த மிருகங்கம் அந்தச் சிறிய பறவையை வழி மறித்து ஏய் சின்னப் பறவையே! என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய். கொ ழுந்து விட்டெரியும் இந்தப் பெரிய தீயைக் கண்டு பலம் வாய்ந்த நாங்களே சும்மா பயந்து போய் இருக்கும் போது நீ மட்டும் பெரிதாக எதனைச் சாதித்து விடப் போகிறாய். பேசாமல் எங்களுடன் இருந்து விடு என்று கூறின.அதற்கு தொடர்ந்து தன் கடமையைச் செய்தவாறு அந்தப் பாடும் பறவை பின்வருமாறு பதில் சொன்னது.

நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். பலம் வாய்ந்த மிருகங்கள் பல எதுவும் செய்யாமல் வாழாவிருந்த போதும் தன்னால் சாதிக்கக் கூடியது மிகச் சிறிய அளவே என்று தெரிந்து கொண்டும் தன்னால் ஆனதை உடனடியாகச் செய்யத் தொடங்கிய அந்த பறவையைப் போலவே உலகிலுள்ள வாழும் தமிழர்கள் அனைவரும் எம்மால் இயன்ற அனைத்தையும் எமது முழு வளங்களையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும்.

இதன் மூலமே மரணத்தின் வாசலில் நிற்கும் எம் தமிழ் உறவுகளை அந்தக் கொடூரர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் தாயகத்தில் ஒரு தமிழனின் உயிர் அநியாயமாகக் காவு கொள்ளப் படுகிறது என்பதை நினைவில் கொள்வோம்..!!


Comments