புதுக்குடியிருப்பில் புலிகளின் ஊடறுப்புச் சமரின் பின்னர் - வீடியோ

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை கைப்பற்றும் நோக்கில் பாரிய ஆளணி ஆயுத வளங்களோடு தயார் நிலையில் நின்ற சிறிலங்கா படையணிகள் மீது புலிகள் ஊடறுப்பு முறியடிப்புத் தாக்குதலைத் தொடுத்திருந்ததாக புலிகளின் செய்திகள் தெரிவித்திருந்தன.

முதலாம் திகதி முதல் தொடர்ந்த இத்தாக்குதல்களில் ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் படையினரின் முன்னேற்ற முயற்சிகளின் போது பயன்படுத்துவதற்காக கொண்டுவந்து ஆயுதங்கள் சேமிக்கப் பட்டிருந்த ஆயுதக் களஞ்சியம் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இராணுவத்தினரின் பின் நிலைகள் ஊடாக ஊடறுத்து பெட்டி வடிவில் இராணுவத்தினரை முடக்கி புலிகள் செறிவான தாக்குதல்களை மேற்கொண்டதாக கள செய்திகள் தெரிவித்தன.

புதுக் குடியிருப்பைத் தாண்டியும் துடைத்தழிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.



சாரல்

Comments

Osai Chella said…
முடிவில் வருவது பிரிகேடியர் பால்ராஜ் போல இருக்கிறதே? பழைய படமா இது?!