மனித குலம் சந்தித்திராத பேரவலத்தை மருத்துவ ரீதியாக தற்போது எதிர்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் து.வரதராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாள் தோறும் நூற்றுக்கணக்கில் எறிகணைத் தாக்குதல்களினால் படுகாயமடைந்தவர்கள் எடுத்து வரப்படுகின்றனர். மருத்துவமனை என்று சொல்ல முடியாது, ஆனால் முதலுதவி வழங்கும் இடத்தில் வைத்து சிகிச்சைகள் வழங்கி வருகின்றோம்.
மருத்துவமனையில் காணப்படும் வசதியீனங்கள் உயிர்களை நாள்தோறும் பறித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது.
தரைப்பாதை மூடப்பட்டிருப்பதன் காரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் கப்பலில் 700 வரையான நோயாளர்கள் திருகோணமலை மற்றும் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவ நெருக்கடி தொடர்பாக இன்று திங்கட்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளோம் என்றார் அவர்.

Comments