ஈழத் தமிழர்களின் பிரச்சனையை நான் பேசினாலேயே பலர் எரிச்சலைடைகிறார்கள், அதனால்தான் ஒரு வழக்கைப் போட்டு என்னை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையில், தமிழ்.வெப்துனியா.காமிற்கு தொலைபேசி வாயிலாக ஒரு சிறப்பு பேட்டி அளித்தார் இயக்குனர் சீமான்.
தமிழ்.வெப்துனியா.காம் : ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறீர்கள். இன்று 3வது முறையாக கைது செய்யப்படவுள்ள நிலையில் உங்கள் எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
இயக்குனர் சீமான் : ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சி தமிழகத்தில் பரவலாக எழுந்துள்ளது. இது அடங்காது. நான் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அந்த எழுச்சி மேலும் பெருகத்தான் செய்யும், குறையாது.
எதற்காக சீமான் கைது செய்யப்பட்டான்? ஏன் சிறையில் அடைக்கப்பட்டான் என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் மீ்ண்டும் மீண்டும் எழும். அதற்கு விடை தேடுவார்கள். அதுவே எழுச்சியாகும். அது வளர்ந்து கொண்டேயிருக்கும். எனவே என்னை உள்ளே வைப்பதால் எதுவும் நின்றுவிடாது.
தமிழ்.வெப்துனியா : ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலில் தமிழர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அங்குள்ள மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றம் இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளதே.
சீமான் : அதைத்தானே பேசுகிறேன். ஒவ்வொரு கூட்டத்திலும் அதைத்தானே பேசுகிறேன். நான் மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடியவன். துக்கம் தாங்க முடியவில்லை என்றால் கதறி அழுது விடுவேன். அப்படிபட்ட நிலைதான் நீடிக்கிறது. அதனால்தான் என் இனத்தைக் காப்பாற்றக் குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் பேசுவது சிலருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இவன் பேசினால்தானே எழுச்சி ஏற்படுகிறது என்று எனது குரலை ஒடுக்க நினைக்கிறார்கள். அதனால் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறார்கள். நான் பேசினால் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று இளைஞர்களும், மக்களும் கூடுகின்றனர். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னை சிறைப்படுத்துகின்றனர்.
ஆனாலும் அது அடங்காது. ஈழத் தமிழனத்தைக் காப்பாற்ற தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சி அடங்காது. அது இன்று ஒரு பெரிய இயக்கமாகவே வளர்ந்து வருகிறது. மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தமிழ்.வெப்துனியா : தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை அரசியல் ரீதியாக கொண்டு செல்லலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதா?
சீமான் : ஆம். தமிழறிஞர்கள் பலரும் அவ்வாறு கூறுகின்றனர். என்னோடு இருக்கும் தோழர்கள் கூறுகின்றனர். மாணவர்கள், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இப்போது கூட அது அரசியல் ரீதியாக - ஆனால் எந்தக் கட்சியையும் சாராத - ஒரு இயக்கமாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது. முத்துக்குமாரின் இறுதி நிகழ்ச்சியில், ஊர்வலத்தில் திரண்ட மாணவர்களும், இளைஞர்களும், ஏராளமான தமிழர்களும் எந்த அரசியல் அடையாளமும் கூடாது என்று கூறியது மட்டுமின்றி, அது ஈழத் தமிழரின் அடையாளத்தோடுதானே நடைபெற்றது. இது எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி இயக்கம் ஒரு புதிய அரசியல் போக்காகவே உள்ளது என்பதைத்தானே?
தமிழ்.வெப்துனியா : ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவான அந்த எழுச்சி சரியான அரசியல் வடிவம் பெற வேண்டுமென்றும் ஒரு கருத்து நிலவுகிறதே?
சீமான் : தேர்தல் அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது, அது சில இடங்களுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேசுவது என்றெல்லாம் இருக்கும். அது சரிப்படாது. இந்த எழுச்சி ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்டது. அது தமிழீழத்தின் விடுதலை. அந்த இலக்கை எட்டிவிட்டால் எதற்கு அரசியல் எல்லாம்?
ஒரு இயக்கமாக உருவாகியுள்ள இந்த எழுச்சி எப்படிப்பட்ட வடிவத்தைப் பெறும் என்பதனை மக்கள்தான் முடிவு செய்வார்கள். நாம் எதையும் சொல்ல முடியாது. ஆனால், ஒன்று நிச்சயம், இப்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிதான் தேர்தல் களத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெறும். பொறுத்திருந்து பாருங்கள்.
தமிழ்.வெப்துனியா : நெருக்கடியான இந்த நேரத்திலும் எங்களுக்கு ஒரு நேர்காணலைத் தந்ததற்கு நன்றி.
சீமான் : இந்த மக்கள் எழுச்சி தொடரும். மேலும் வலுப்பெறும். நான் உள்ளேயிருந்தாலும், வெளியே இருந்தாலும் அதில் மாற்றம் ஏதுமில்லை. எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. தமிழீழ விடுதலை கிட்டும் வரை நான் பேசுவேன், பேசிக் கொண்டே இருப்பேன்
|

Comments