ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தின் மீது முப்படைகளையும் ஏவி, ராணுவத் தாக்குதல் நடத்துவதை இந்தியப் பார்ப்பன ஆட்சியானாலும், பார்ப்பன ஊடகமானாலும் கண்டிக்க முன்வரவில்லை.
நார்வே தலையீட்டில் உருவான சமரச உடன்பாட்டில் தமிழர்களின் பிரதேசத்தை சிறீலங்கா அங்கீகரித்தது. தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அங்கீகரித்து, அந்த இயக்கத்துடன் போர் நிறுத்த உடன்பாடும் செய்து கொண்டது.
போர் நிறுத்த உடன்பாடு உருவாகி, மீண்டும் அமைதி திரும்பும் சூழல் உருவான நிலையில் விடுதலைப் புலிகள் தமது மக்களுக்காக ஒரு தலைநகரையும், நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி, மக்கள் நலத் திட்டங்களை அமுலாக்கி வந்தனர். சிறந்த நிர்வாக அமைப்பையும் வழங்கினர். அமைதியான இந்த சூழ்நிலையை மீண்டும் குலைத்து, போர் நிறுத்த உடன்பாட்டை கிழித்தெறிவேன் என்று சிங்களர்களிடம் வாக்குறுதி தந்து, பதவிக்கு வந்த ராஜபக்சே தான் மீண்டும் தேன்கூட்டைக் கலைத்துப் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தொடங்கினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிராகரித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்பினால், இருதரப்பினரும் முன் கூட்டியே ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் விதிகளையே தூக்கி எறிந்தார் ராஜபக்சே.
ராஜபக்சேயின் இந்த பச்சை இனவெறியை இந்தியா கண்டிக்கவில்லை. பார்ப்பன ஊடகங்கள் கண்டிக்க தயாராக இல்லை. மாறாக - ராஜபக்சேயைத் தூண்டிவிட்டன. போர் நிறுத்தத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு தூபம் போட்டன.
ராஜபக்சேயின் ராணுவ வெறியாட்டம் எல்லை மீறியது; கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட 'செஞ்சோலை' முகாம் மீதே குண்டு வீசி, 63 குழந்தைகளை பிணமாக்கியது ராஜபக்சே ராணுவம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும், சமரசப் பேச்சு வார்த்தைகளில் பல சுற்றுகளில் பங்கேற்றுப் பேசியவருமான தமிழ்ச்செல்வனை குறி வைத்து குண்டு வீசி பிணமாக்கினார்கள். மீண்டும் ராணுவத்தின் துப்பாக்கிகள், தோட்டாக்களை கக்கின. போர் மேகம் சூழ்ந்தது.
சுனாமி சீற்றத்துக்கு உள்ளாகி உடைமைகளையும், உயிரையும் இழந்த பல்லாயிரம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகள் வழங்க முன் வந்த மறுவாழ்வு நிதி உதவியைக்கூட கிடைக்கவிடாமல் ராஜபக்சே ஆட்சி தடுத்து நிறுத்தியது.
வடக்கு-கிழக்கு மாநிலங்களை தனித்தனியே பிரித்துதான் வைப்போம்; ஒன்றாக இணைக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்றது. மிக முக்கிய தேசியப் பிரச்சினையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் புறக்கணிக்கும் அதிகாரம் அந்நாட்டின் அதிபருக்கு உண்டு என்றாலும், இந்த முக்கியப் பிரச்சினையில் அதைப் பயன்படுத்த ராஜபக்சே தயாராக இல்லை.
தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலையினால் உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் நடக்கும் நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா அறிவிக்கப்பட்டது. அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றிருந்த சிறீலங்கா - இதன் காரணமாகவே குழுவிலிருந்து நீக்கப்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் தலைநகரான கிளிநொச்சிக்குள் ராணுவம் நுழைந்தது. அப்போதும் விடுதலைப்புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை. அங்கே வாழ்ந்த 3 லட்சம் தமிழர்களும் தங்களின் பாதுகாப்புக் கவசமான விடுதலைப்புலிகளோடு முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்தார்கள். அப்போதும் ராணுவம் விடவில்லை. முல்லைத் தீவை நோக்கியும் படையுடன் நுழைந்திருக்கிறது.
இப்போது மக்களை பாதுகாப்புக் கேடயமாக புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்று ராஜபக்சேயும் பார்ப்பன 'இந்து' ஏடும் பார்ப்பன இந்திய அரசும் ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.
மக்களின் கேடயமே விடுதலைப்புலிகள் தான். தங்கள் இன்னுயிரை இழந்து, தற்கொலைப் படையாகி, இந்த வீரர்கள் 30 ஆண்டுகாலமாக போராடிக் கொண்டிருப்பதே இந்த மக்களின் விடுதலைக்குத்தான். தமிழ் ஈழ மக்கள் அனைவருக்கும் இது புரியும். சர்வதேசத்துக்கும் தெரியும். துரோகக் கும்பலின் உண்மையான முகமும், ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் கருணாவையும், டக்ளசையும் புரிந்தே வைத்துள்ளனர்.
மக்களைக் கேடயமாக்கி, விடுதலைப்புலிகள் போரிடுகிறார்கள் என்று ராஜபக்சே, ஏதோ, தமிழர்கள் மீது பாசம் பொங்கி வழிபவர் போல் பேசுகிறார். 'இந்து' பார்ப்பானோ ராஜபக்சேயின் மனிதாபிமானத்தை வானளவப் புகழ்கிறான்.
இந்திய ராணுவத்தினரே தமிழர்களின் இனப்படுகொலைக்காக சிங்கள ராணுவத்துடன் களத்தில் நிற்கும் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் மீது குண்டு வீசிய விமான ஓட்டியாக இந்திய விமானப் படையைச் சார்ந்த ஒருவனும் பாகிஸ்தான் விமானப் படையைச் சார்ந்த ஒருவனும் புலிகளிடம் பிடிபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பார்ப்பனர் கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.
இந்திய பார்ப்பனிய ஆட்சியே!
தமிழினப் படுகொலைகளை கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடி, ராஜபக்சேயுடன் கட்டிப் புரளும் 'இந்து', 'தினமலர்' திமிர் பிடித்தக் கூட்டமே!
ஈழத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் குலைத்த ராஜபக்சேயை நீ கண்டித்தாயா? அமைதியான தீர்வை நோக்கித் திரும்பியபோது - அதைக் குலைத்து மீண்டும் ராணுவ மோதலை உருவாக்கிய சிங்கள அரசைக் கண்டித்தாயா?
செஞ்சோலைக் கொடுமையையோ, சுனாமி நிவாரண உதவிகளைத் தடுத்ததையோ, கண்டித்தாயா?
இந்தியப் பார்ப்பன அரசே! பார்ப்பன 'ராமே!' துரோகக் காங்கிரசே!
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகள் உனக்கு அவ்வளவு அலட்சியமா?
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உங்களின் பார்ப்பன இறுமாப்புத் தொடரப் போகிறது?
பதில் கிடைக்கும் காலம் விரைந்து வரும்! மறந்து விடாதீர்!
Comments