வன்னியிலிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா அழைத்துவரப்பட்டவர்கள் சிசிச்சையின்றி நெளுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த.தே.கூ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி வன்னியிகிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்துவரப்பட்டவர்களுள் நோயாளர்கள் உட்பட அவர்களின் உறவினர்களுமாக 59 பேர் நெளுக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்களில் சின்னம்மை மற்றும் தொற்று நோய்களுக்கு உள்ளானவர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள நோயர்கள் வைத்திய சிகிச்சையின்றி பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 நோயார்களை நெளுக்குளம் தடுப்பு முகாமில் உள்ள உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments