ஆனந்தக் கடலில் 'அவாள்' கூட்டம்!




முல்லைத் தீவில் ராணுவத்தின் ஷெல் வீச்சுக்கு நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிர்ப் பலியாகியுள்ளனர். இதை அய்.நாவின் அதிகாரியே கண்டித்துள்ள செய்தி வெளி வந்த அதே நாளில் (ஜன.27) 'இந்து' ஏடு வெளியிட்ட வாசகர்களுக்கு கடிதங்களைக் கீழே தருகிறோம்:

எல்.வி. முகுந்தன், சென்னை என்ற பெயரில் வெளிவந்த கடிதம்:

"இலங்கையின் 20 ஆண்டுகால சிவில் யுத்தம், முடிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்தகால இலங்கை அதிபர்கள் சந்தித்த தோல்வியை ராஜபக்சே வெற்றியாக்கி சாதித்துக் காட்டிவிட்டார். விடுதலைப்புலிகள் தோல்வியின் எல்லைக்கு வந்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதே - அவர்கள் புலிகளையோ, பிரபாகரனையோ ஆதரிக்கவில்லை என்பதை காட்டுகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் - இந்தியா, பெரிய நாடாக இருந்தாலும், இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்."

கடலூரிலிருந்து ரம்யா ரவீந்திரன் என்ற பெயரில் வெளி வந்துள்ள வாசகர் கடிதம்:

"ராஜபக்சே வெற்றிக் கனியை சுவைக்கப் போகிறார். முல்லைத் தீவும் வீழப் போகிறது. அங்கே தான் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா, இலங்கை அரசுக்கு கட்டாயம் உதவ வேண்டும். தமிழ்நாட்டில், சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது."


எஸ். இராமச்சந்திரன், சென்னை என்ற பெயரில் வெளியிடப்பட்ட கடிதம்:

பிரபாகரன் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒரு லட்சம் தமிழர்களை விடுவிக்குமாறு, இப்போதாவது, தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும்."

- இப்படி கடிதங்களை பார்ப்பனக் கொழுப்புடன் வெளியிடுகிறது 'இந்து'.

இதே தேதியில் 'இந்து எழுதிய தலையங்கம் - பிரபாகரன் தோல்வி அடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கூத்தாடுகிறது.

2006 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் 15000 சதுர மைல் இருந்தது. இப்போது அது 350 சதுர கிலோ மீட்டராக சுருங்கிவிட்டதாக சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து வெற்றி முழக்கமிடுகிறது அந்த ஏடு.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த இதே ஏட்டில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் 15000 சதுர கிலோ மீட்டர் பகுதி இருந்ததை எப்போதாவது ஒப்புக் கொண்டு எழுதியது உண்டா? இவ்வளவு பெரிய பகுதியை மக்கள் ஆதரவின்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா?

தமிழர்கள் தங்களுக்கான பகுதியை தங்களிடம் வைத்திருப்பது எப்படி கட்டுப்பாடு ஆகும் என்று 'இந்து' பார்ப்பானை கேட்கிறோம்! அவ்வளவு பெரிய தமிழர் பகுதியை, சிங்கள ராணுவம் பிடித்து வைத்திருப்பது என்பதே 'ஆக்கிரமிப்பு' அல்லவா? இந்து ராமின் மனுதர்மக் கண்ணோட்டத்தில் இவை எல்லாம் நீதியாகிறதா?

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களையெல்லாம் கோமாளி என்று திமிருடன் பேசிய ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு 'இந்து' தலையங்கம் பாராட்டு மழைகளை பொழிகிறது. "25 ஆண்டுகால போரில் 95 சதவீதம் முடிந்துவிட்டது" என்று பொன்சேகா கூறியிருப்பது மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்பு அல்ல; மிகச் சரியாகவே பேசுகிறார் என்று பூரிக்கிறது.

சிங்கள ராணுவம் வெற்றி மேல் வெற்றி குவிக்கிறது என்று பூரிக்கும் 'இந்து' ஏட்டின் தலையங்கம் - ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க கல்மடு நீர்த் தேக்கத்தை விடுதலைப் புலிகள் தகர்த்ததைக் கண்டிக்கிறது.

ராணுவம் முல்லைத் தீவில் முன்னேறுவதைத் தடுக்க முயன்ற நடவடிக்கையை முல்லைத் தீவிலிருந்து மக்கள் வெளியே வர முடியாமல் தடுக்கவே புலிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பழி போடுகிறது!

அட, மான - ஈனமற்ற - பார்ப்பனப் பதர்களே! 'போரில்லாப் பகுதி' என்று ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வந்த அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசி, பல நூறு மக்களை பிணமாக்கியுள்ளதே. இதை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனவே. இந்து பார்ப்பானின் காமாலைக் கண்களுக்கு ராணுவத்தினர் இந்த அட்டூழியங்கள் தெரியாதோ!

மக்களைக் காக்கவே - மக்கள் விடுதலைக்குப் போராடும் இயக்கத்தை மக்களுக்கு எதிராக சித்தரிப்பது எவ்வளவு கேவலம்?

விடுதலைப் புலிகள் பிரபாகரனின் கதை முடிவுக்கு வந்துவிட்டதாக எக்காளச் சிரிப்பு சிரிக்கிறான் 'இந்து' பார்ப்பான். விடுதலைப்புலிகளையும் பிரபாகரனையும் இப்படி எல்லாம் பாப்பாரக் கூட்டம் எழுதுவதற்கு இந்த நாட்டில் உரிமை உண்டு.

ஆனால், இதற்கு பதில் கூறி, தமிழின உணர்வோடு விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் ஆதரித்துப் பேசினால் மட்டும் கலைஞர் ஆட்சியில் அடக்குமுறை பாயும்; சிறைக் கதவுகள் திறக்கப்படும்.

இது ஜனநாயக நாடு தானா?

தமிழன் ஆட்சி நடந்தாலும் இங்கே பார்ப்பன நாயகம் தானா?

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!


Comments