தமிழ்நாட்டில் ஐந்து இலட்சம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்தும் போர் நிறுத்தம் கோரியும் தமிழ்நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஆதரவு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர்களைக் காக்க வலியுறுத்தி பொது வேலை நிறுத்தப் போராட்டம் தமிழ் நாடு முழுவதும் இடம்பெற்றுவருகின்றது. இதில் பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

திராவிட விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர் பி.டி. அரசகுமார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். துரைசாமி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் நேற்று சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் :

"இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் போரை நிறுத்தாவிட்டால் இலங்கையுடனான உறவை முறித்துக்கொள்வோம் என்று எச்சரிக்கை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

டீ கடைகளும் அடைப்பு

இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் சென்னை உணவு தானிய வியாபாரிகள் சங்கம், டீக்கடை வியாபாரிகள் சங்கம், அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம், தையல் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு சுப்பர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள் கலந்துகொள்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் கடைகள் இன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அடைக்கப்பட்டு இருக்கும். மருந்து உயிர் காக்கும் பொருள் என்பதால் மருந்துக்கடைகள் மாலை 4.00 மணிக்கு மேல் திறக்கப்படும்.

சட்டரீதியாக சந்திக்கத் தயார்

இலங்கை தமிழர்களுக்காக வணிகர்கள் ஒருநாள் இழப்பைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கடைகளை அடைக்கும் வணிகர்களுக்கு காவல்துறையும் பொது மக்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்றார்.

வேலைநிறுத்தத்துக்கு வழக்கறிஞர்கள் முழு ஆதரவு

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் : இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக் கோரி வழக்கறிஞர்கள் செய்துவரும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நாளை 5ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறது.

5ஆம் திகதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கைப் பிரச்சினையில் மௌனம் காக்கும் இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்த முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தொடர் உண்ணாவிரதம் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இலங்கைப் பிரச்சினைக்காக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தின்போது தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஜே. முகோ பாத்யாய முன்னிலையில் வழக்கறிஞர்கள் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. "இளம் வழக்கறிஞர்கள் இலங்கைப் பிரச்சினைக்காக உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டனர். நீதிபதிகள் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும்" என்று நீதிபதிகளிடம் தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் தெரிவித்தார். இதுகுறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தீர்மானங்களாக நிறைவேற்றி அளிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கறுப்புப் பட்டி அணிந்து டாக்டர்கள் போராட்டம்

இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் போது கறுப்புப் பட்டி அணிந்து பணிபுரிய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மருத்துவ வசதியும் மருந்துகளும் இன்றி தமிழர்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு வரவேற்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டித்தும் போரை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரச மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் இன்று புதன்கிழமையன்று கறுப்புப் பட்டி அணிந்து பணிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

பொலிஸார் எச்சரிக்கை

இன்று முழு அடைப்புப் போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று பொலிஸ் டி.ஜி.பி. ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட அறிவிப்பை ஒட்டிஇ தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும்இ மாநிலம் முழுவதும் காவல் சட்டம் பிரிவு 30(2) மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41இன் படி ஒழுங்குமுறை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம்

அன்றைய தினம் ரயில் மற்றும் வீதி போக்குவரத்தை தடைசெய்தல்இ அலுவலங்கள் மற்றும் இதர பணிகளுக்குச் செல்வோரைத் தடுத்தல்இ கடைகள்இ அங்காடிகள்இ பெற்றோல் நிரப்பு நிலையங்கள்இ திரையரங்குகள் முதலியவற்றை மூட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்பு அறிவிப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வீதி மறியல்களில் ஈடுபடுதல்இ உருவ பொம்மைகளை எரித்தல்இ அரசு பஸ்கள் மற்றும் பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல்இ தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Comments