சிறிலங்கா தாக்குதல் விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது

சிறிலங்கா வான் படையின் போர்; விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டவீழ்த்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது இன அழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வந்த கிபிர் ரக விமானமே இன்று வெள்ளிக்கிழமை காலை 11.25 மணியளவில் இரணைப்பாலை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியதை அங்குள்ள மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.

முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல்போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

Comments