தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயக்குநர் சீமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.



இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு தாக்குதலையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயக்குநர் சீமான் சிறைச்சாலையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மாணவர்களின் உண்ணாவிரதம், வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டம், போன்றவற்றில் இயக்குநர் சீமான் பேசியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டதையடுத்து சீமான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல்துறையின் தீவிர தேடுதலையடுத்து சீமானை தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments