ஒளிக்கலை போராளி லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு; இசைப்பாடகர் இசையரசன் சாவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். ஒளிப்படக் கலைப் போராளியும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர்.

அத்துடன் தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறப்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளார். அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர்,

தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் ஆவார்.


Comments