வன்னியில் படுகொலைகள்! சூடான், கொங்கோ நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரானது - மேரி ரொபின்சன்

வன்னியில் சிறிலங்கா படைகள் மேற்கொள்ளும் மனித படுகொலைகள் சூடான், கொங்கோ ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரானது என ஐ.நா.முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

வன்யில் இடம்பெறும் மோதல்களினால் தொடர்ச்சியாக சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

வன்னிச் சிவிலியன்கள் எதிர்நோக்கிவரும் துயரங்கள் குறித்து கேள்வி எழுப்பாவிட்டால் அது மனித உயிர்களை உதாசீனம் செய்வதற்கு நிகரானது எனவும், சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரான ஓர் சூழ்நிலை தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஸா, டார்பூர் மற்றும் கொங்கோ போன்ற பிரதேசங்களில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் மெளமாக இருப்பது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உண்மைக்கு மாறான தகவல்களினால் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளை திருப்தியடைந்துவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.


Comments