போரை நிறுத்து என்று சொல்வதற்குக் கூட இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை

ஈழத் தமிழருக்கு ஆதரவு தரமாட்டோம் என்று சிலர் இங்கே இறுக்கமாக வாயைக் மூடிக் கொண்டிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார், பூஜ்ய சிறி சிறி ரவிசங்கர் குருஜி. இலங்கைக்கு அமைதித் தூதராகச் சென்று போரை நிறுத்தவும் தயார் என்று அறிவித்திருக்கிறார் அவர்.

கடந்த 27ஆம்தேதி ராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்குச் சென்று அங்குள்ள இலங்கைத் தமிழர்களைச் சந்தித்தார் ரவிசங்கர் குருஜி. ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்குள் அடியெடுத்து வைத்த முதல் ஆன்மிகவாதி அவர்தான். அதற்கு மறுநாள் சென்னையில் உலக அமைதிக்காக, "இசையும் தியானமும்'என்ற தலைப்பில் அரு ளாசி வழங்கிப் பேசியபோது, அதில் ஆன்மிகத்தை விட அவர் ஈழப் பிரச்சினையைப் பற்றிப் பேசியதே அதிகம்.

இது தொடர்பாக ரவிசங்கர் குரு ஜியைச் சந்திக்க முயன்றோம். பகீரத பிரயத்தனத்துக்குப் பிறகு, திருவான் மியூர் கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் அவரை நாம் சந்தித்தோம். அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்களுக்குத் தரிசனம் வழங்கி விட்டு அதன்பின்பே நம்மிடம் பேசினார் அவர்.

ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசியபோது, அங்குள்ள பெண்களும், வயதானவர்களும் தாங்கள் அனுபவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்றாண்டுகளுக்கு முன் கொழும்பு சென்றிருந்தபோது, அங்கே ஆன்மிகக் கூட்டங்களின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன். பலம் உள்ளபோதே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லாப் பலத்தையும் இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது. எனவே, பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்று பலமுறை சொன்னேன். எந்தப் போரையும் யுக்தியால்தான் வெல்ல முடியும். இதற்கு மகாபாரதப் போரே உதாரணம் என்று குறிப்படுகின்றார் அவர்.

ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல் வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜி வந்தால் மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே, விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவராகச் செல்ல இருக்கிறேன்' என்றார் குருஜி.

அவரிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

தூதுவராகச் செல்ல யாராவது பரிந்துரைக்க வேண்டுமா? யாருடைய அனுமதிக்காகக் காத்திருக்கிறீர்கள்? யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? "ஒரு வீடு தீப்பற்றி எரியும்போது, என் வீட்டை அணைக்க வாருங்கள்' என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது யாரைக் கேட்டு உதவிகளைச் செதோம்? அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன். எங்கே துயரம் நடந்தாலும் அந்தத் துயரத்தைத் துடைப்பது மனிதனின் கடமை.'

நீங்கள் தூதுவராகச் செல்வதை இலங்கை அரசு ஏற்குமா? ஏற்றுக்கொள்ளும் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்?

அமைதிக்கான ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளும்போதே இப்படியொரு சந்தேகம் நமக்கு ஏன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை. தற்போது அரசியல்வாதிகளை விட ஆன்மிகவாதிகளைத்தான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். ஆன்மிகவாதிகள் மக்களின் நலனை மட்டும் பார்ப்பவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.

நான் அமைதித் தூதுவராக இலங்கைக்குச் சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வர முடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் உணர்த்துவேன். இலங்கை ஒரு புத்த மத நாடு. அங்குள்ள ஒருசிலரைத் தவிர, வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள்ள புத்த பிட்சுகள், இலங்கை அதிபர் ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் வாதிகளைச் சந்தித்து இதை உணர வைப்பேன்.'

இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க சரியான கொள்கைகள் நமது நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். எதை வைத்து அப்படிச் சொல்கி றீர்கள்?

போரை நிறுத்து என்று சொல்வதற்கே இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை. இலங் கைக்கு இந்தியா ராணுவ உதவி, ஆயுத உதவிகளைச் செது வருகிறது. இதை மூடிமறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற் காக இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க இந்திய அரசு என்னதான் செய வேண்டும்?

உடனடியாக போரை நிறுத்தி, அங்குள்ள தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு காண இந்திய அரசு முன்வர வேண்டும்.

(குமுதம்.கொம்)



Comments