இங்குள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வணி கர்கள், பொதுநல அமைப்பினர் எனப் பலரும் வேதனைப் படுவதுடன் தங்களால் முடிந்த அளவில் போராட் டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இலங்கைப் பிரச்சினை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த மனநிலை எப்படி இருக்கிறது என்பதையறிய களமிறங்கினோம்.இதோ தமிழர்களின் இதயத்திலிருந்து வெளிப்படும் குரல்கள்........
வேல்முருகன்- புலிவலம்-கடலூர் மாவட்டம்- இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதைக் கண்டித்து அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியினர் போராடி வருகிறார்கள். ஆனால், கூட்டணித்தலைவரான ஜெயலலிதா மட்டும் இலங்கை அரசை ஆதரிக்கிறார். வைகோவும் கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் கூட்டணித் தலைவருக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். தமிழக கட்சி கள் முரண் பட்டு நிற்பதால்தான் ராஜபக்சே கொன்று குவிக்கிறான்.
திருநாவுக்கரசு-சிலம்பூர்- அரியலூர் மாவட்டம்- மத்திய அரசின் இப்போதைய அணுகு முறை மனிதநேயமற்ற கொடூர புத்தியைக் காட்டு கிறது. தமிழர்கள் அங்கே சாகடிக்கப்படுகிற நிலையில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கேபோய் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு, பல்லை இளித்துவிட்டு வருவதென்பது, தமிழர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டார்களா? மிச்சம் மீதி இருக்கிறார்களா? என்று கேட்பதுபோல உள்ளது.
வேலு-உளுந்தூர்பேட்டை - பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்கள் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றார்கள். அந்த சீக்கியர்களின் காலை முத்தமிட்டு பிரதமர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சி, ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்ற ஒரே காரணத்தை சொல்லியே தமிழர்கள் படு கொலை செய்யப் படுவதற்கு உதவி செய்து தனது வர லாற்றில் ஒரு கரும் புள்ளியைப் பெற் றுள்ளது.
ராமகிருஷ்ணன்- அரசூர்- மும்பை யிலே வடமாநிலத்தவர் கள் வேலை செய்யக் கூடாது என ராஜ்தாக்கரே கும்பல் துரத்தி துரத்தியடித்த போது துடித்துப்போனது மத்திய அரசு. ஆனால், இலங்கைத் தமி ழனை சாகடிக்க ராணுவ உதவி உட்பட எல்லாம் செய்கிறார் பிரதமர். வடநாட்டவர்களை யாராவது இப்படி சாகடித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கு மா இந்திய அரசு?
ரமேஷ்-நயினார்குப்பம்- இலங்கையை நட்பு நாடாக ஆக் கிக்கொள்ள பாகிஸ்தான், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆயுத சப்ளை செய்கின்றன. ஓர் இனத்தை அழித்துதான் அந்த நாட்டோடு நட்பு கொள்ள வேண்டுமா? கம்யூனிச நாடான சீனா கூட, ஹிட்லரின் தம்பியான ராஜபக் சேவுக்கு உதவி செய்வது பற்றி என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?
ரசாக்-விருத்தாசலம்- இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு காரணம் மத்திய- மாநில அரசுகள்தான். தமிழர்களை பாது காப்பான இடத்திற்கு வரவழைத்து கூட்டம் கூட்டமாகக் கொல்கிறது ராஜபக்சே அரசு. இலங்கை அரசு, நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறது. இந்திய அரசு சைலன்ட் கில்லராக இருக்கிறது. சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தமிழகத்தில் மரியாதை இருந்தது. அதை அவர்களே காலில் போட்டு மிதித்து சின்னா பின்னப்படுத்திக்கொண்டனர்.
ஜாகீர்உசேன் -கள்ளக்குறிச்சி- இந்தியாவை ஆள்வதற்கு துணிவுமிக்க ஒரு ஆள் தேவை. ஓட்டுக் காகவும் பதவி யைப் பிடிக்கவும் யாரோடு வேண்டு மானாலும் கூட்டணி சேரும் இப்படிப்பட்ட கட்சிகள் ஒருபோதும் இலங் கைத் தமிழர்களைக் காப் பாற்றமாட்டார்கள். இங்கே சங்கராபுரம் பக்கத்தில், சமீபத்தில் ஒரு கர்நாடகா டூரிஸ்ட் பஸ், ஒரு ஆள் மீது மோதி சாகடித்துவிட்டது. ஆத்திரப்பட்ட அந்த ஊர் மக்கள் அந்த பஸ் மீது கல்லெறிந்ததில் கண் ணாடிகள் உடைந்தன. இதைக் கேள்விப் பட்ட கன்னடத்துக்காரன் அங்கே உடனே போராட்டத்தை ஆரம்பித்துவிட்டான். அப்படிப் பட்ட இனவுணர்வு இலங்கைத் தமிழன் சாகிற போதும்கூட நம்மிடம் குறைவாகவே இருக்கிறது. இளைஞர் முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குப் பிறகாவது தமிழர்கள் பொங்கியெழவேண்டாமா?
பாலசுந்தரம்-தச்சூர்- இலங்கை அரசுக்கு தோள்கொடுப்பதன் மூலம் நம் இனத்தை நாமே அழிக்க மறைமுகமாக உதவும் மத்திய அரசுக்கு நாம் சரியான பாடம் புகட்டவேண்டும். அதன் முதற்கட்ட மாக, மத்திய அரசுடனான (காங்கிரஸ்)உறவை தமிழக அரசு (தி.மு.க) துண்டிக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் வெளிச்சமாகிவிட்டது.
தமிழ்-கல்லூரி மாணவி- இலங்கைத் தமிழ் மக்கள் சாவதை தடுக்க நிரந்தர போர் நிறுத்தம் தேவை. எங்களைப் போன்ற பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியைப் போல ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்து நின்றால் தமிழர் சாவை தடுக்க முடியும். போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காகத் தமிழகம் ஸ்தம்பிக்கக் கூடிய அளவுக்கு போராட நாங்கள் தயார்.
லட்சுமி-மாம்பட்டு- சோனியாவின் கணவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், அந்த ஒரு உயிருக்காக பழி வாங்குகிறேன் என்று ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளனர். ஜனநாயக நாடான இந்தியாவில் இருந்துகொண்டு ஒரு சர்வாதிகாரிபோல செயல்பட்ட சோனியா மேடத்தின் முகமூடி கிழிந்துவிட்டது.
முருகன்-மந்தாரகுப்பம் - தமிழனின் வரிப்பணத் திலேயே ஆயுதம் வாங்கி ராணுவம் மூலம் இலங்கைக்கு உதவி செய்யும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டு மாணவர் சமுதாயம் விழித்துக்கொண்டது. இனி சும்மா இருக்காது. முத்துக் குமாரின் தியாகத்திற்குப் பிறகாவது தமிழக அரசியல் வாதிகளே ஒன்று சேருங்கள். உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள். மிச்சம் மீதியிருக்கும் இலங்கைத் தமிழனையாவது காப்பாற்றுங்கள்.
பார்த்திபன்-நெய்வேலி- இந்தியாவிற்குள்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது. முல்லைப்பெரியாறு, காவிரிப்பிரச்சினை என்று எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் செவிடன் போல செயல்படும் மத்திய அரசு இலங்கைத் தமிழனை அழிக்க கங்கணம் கட்டி நிற்கிறது.
உதயகுமார்-கன்யாகுளம்- பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உலக நாடுகளில் உள்ள முஸ்லிம் சகோதரர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இலங்கைத் தமிழர் களின் மரண ஓலங்களைத் தடுத்து நிறுத்துங்கள் என்று தமிழர்கள் குரல் கொடுத்தால், விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டிப் பேசுகிறார்கள். இது என்ன நியாயம்?
வள்ளி- சிதம்பரம் - தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு, தெரிந்தே உதவி செய்யும் இந்திய அர சுக்கும் அதற்குத் துணை போகும் அரசியல்கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டுமென்றால் வரும் நாடாளுமன்றத் தேர் தலை ஒட்டுமொத்த தமிழகமும் புறக்கணிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தியாவும் உலக நாடுகளும் இந்தப் பிரச்சினையைத் திரும்பிப் பார்க்கும்.
அனிலா-குடும்பத் தலைவி- தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒட்டுமொத்த குரலும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒலித் தால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடி யும். அடுத்த வீட்டில் எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நகர மக்களைப்போல வாழாமல், ஓடிவந்து உதவி செய்யும் கிராமத் துக்காரர்கள்போல செயல்படவேண்டிய மத்தியஅரசு ஏன் மவுனம் சாதிக்கிறது?
பிரேமா-ரேவதி- கல்லூரி மாணவிகள் -தொழுதூர்- முத்துக்குமார் என்ற இளைஞன் தன்னுயி ரைத் தந்தான். இதுவே தமிழனின் கடைசி தற்கொலையாக இருக்கட்டும். தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதுபோல, ஒவ்வொரு நிமிடமும் கண்ணீர் வடிக்கும் இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க ஒன்றுபடுவோம்.
இந்திரா அன்பரசி -தொழுதூர்- இலங்கையில் தமிழ்ப்பெண்கள் கொல்லப்படுவதும் கற்பழிக்கப் படுவதும் கொடூரமாக இருக்கிறது.
இங்குள்ள அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்கள் அக்கா, தங்கை - அண்ணன், தம்பிகள் பாதிக்கப் படுவதுபோல உணர்ந்தால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
ஆதிலட்சுமி-குணமங்கலம்- இலங்கை தமிழர்கள் பரிதவிக்கிற காட்சிகளைப் பார்க்கும்போதும், பதுங்கு குழிகளுக்குள் ஒளிவதைப் பார்க்கும் போதும் எங்களை மாதிரி சாதாரண மனுசங்களே பதறும்போது, இந்த அரசாங்கத்தை ஆளுறவங்களுக்கு மனம் பதறலையா?
-தமிழர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு அனைத்து மாவட்டங் களிலும் ஒரே அலை வரிசையில்தான் இருக் கின்றன என்பதை இந்தக் குரல்கள் அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.
-எஸ்.பி.சேகர்
நன்றி.
நக்கீரன்
Comments