ஈழத்தமிழர்க்கான உயிர் திறந்த மூன்றாவது தியாகி - ஜெகதேசன்

சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய
ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை படித்து மிகவும் கவலை கொண்டிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முத்துகுமார் என்ற இளைஞர் ஈழத்ததமிழர்களுக்காக வீரமரணம் அடைந்த சம்பவம் பற்றி அடிக்கடி கூறிவந்துள்ளதுடன், தானும் ஈழத் தமிழர்களுக்காக ஒருநாள் உயிரிழப்பேன் என ஸ்டீவன் தனது நண்பர்களிடம் கூறிவந்துள்ளார் எனவும் நேற்றைய சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இளைஞரின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீபனின் உடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் சுங்கை திராம் சீன மின்சுடலையில் தகனம் செய்யப்பட உள்ளது

இதேவேளை ஈழத்தமிழர்க்கான தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் முத்துக்குமாரும், திண்டுக்கலில் ரவியும் தமது இன்னுயிரை தியாம் செய்த நிலையில் மூன்றாவதாக ஜெகதேசன் உயிர் திறந்துள்ளார்.



Comments