உலகெங்கும் வாழ் புலம்பெயர் தமிழர் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
நீங்கள் முன்னெடுத்துவரும் பொருளாதாரத் தடைய கைமேல் பலன் அளித்து வருவது வெள்ளிடை மலை.
நுகர்வோர், இறக்குமதியாளர், வணிகர் எனப் பாகுபாடின்றி தமிழர் அமுல் படுத்தும் இத் தடையின் விரிவாக்கம் எத்துணை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் ஐயம் எதுவும் இன்றிப் புரிவது அவசியம்.
இது ஒரு விடாமுயற்சி. இலக்கை அடையும் வரை தொடரப்பட வேண்டியது. இடைத் தடங்கல் என்பது இருக்கவே கூடாது. சிறிலங்காவின் பொருளாதாரத்தை வீழ்த்த இதுவே சிறந்த வழி.
இது வரை கிடைத்த பலனின் வெளிப்பாட்டை இங்கே சுட்டுவது தகும்.
சிறிலங்காவின் தற்போதைய அந்நியச் செலாவணியானது நாட்டின் ஒன்றரை மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
தனியார் வங்கிகள் மத்திய வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச வைப்பு கீழிறக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கத்தில் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்ய மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் பெறுமதியைத் தக்க வைக்கும் பெரும் பிரயத்தனத்திலும் மத்திய வங்கி இறங்கியுள்ளது.
இவற்றிற்குச் சிகரம் வைத்தாற் போல் சிறிலங்காவுக்கு வெளியே உள்ளவரின் சேமிப்புக் கணக்காகிய வதிவிடமற்ற அந்நிய நாணயக் கணக்குகளிலும் (NRFC); மத்திய வங்கி கைவைக்க உள்ளது.
எம்மவர் முயற்சி இதுவும் செய்யும், இன்னும் செய்யும்.
சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!
| |
ஒரு இனத்தின் விடுதலையை தனியே ஓர் விடுதலை இயக்கத்தினால் மட்டும் அடைந்துவிடமுடியாது. போராட்டமானது ஒவ்வொருவராலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும். இதனால் எம் இனத்தின் விடுதலை விரைவாக்கப்படும். எமது வீடுகளில் முதலில் ஸ்ரீலங்கா பொருட்களை தடைசெய்து எமது போராட்த்தை ஆரம்பிப்போம். தமிழ் பொங்கும் தைப்பொங்கலில் இது ஒரு விதியாகட்டும். ஒன்றுபட்டால் உண்டு விடுதலை. [also in PDF]
|
Comments