![](http://www.swissmurasam.net/images/stories/Article/article_1.jpg)
பிராந்திய வல்லரசாக இருக்கிறதாகக் காட்டிக் கொண்டாலும் இந்தியாவால், இனவெறிச் சிந்தனை மேலாதிக்கம் பெற்றுவிட்ட சிங்கள மக்களின் மனங்களை தமிழின வெறுப்பில் இருந்து விலக்கி விட முடியவில்லை. இந்த உண்மையை சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாகக் காணும் காலம் இது. வெளி நாட்டு அரசுத் தூதுவர்களும் பிற வெளிநாட்டுப் பிரமுகர்களும் நேர்மையான விமர்சனங்களை வெளியிட்டால் அவர்களை இலங்கை வெளிநாட்டு அமைச்சினால் அழைத்துக் கண்டிக்கப்படுவது வழமையாகிவிட்டது.
அரச பதவி சார் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காது சாதரண ஏனைய பிற அரசியல் வாதிகளும் கேவலமான வகையில் அறிக்கைகளும் கண்டனங்களும் தெரிவிக்கும் மூன்றாந்தர அரசியல் அரங்கு ஏறுவதையும் காணலாம்.
இத்தகைய பின்னணியில் இந்தியா இலங்கையின் நல்ல பிள்ளையாகி மாறி அதன் அனுதாபத்தைப் பெற்று இலங்கையின் வர்த்தக, வணிக, கனிம, வளங்களைச் சுரண்டுவது இலாபகரமானது எனத் தீர்மானித்து விட்டது.
ஊரான் வீட்டு நெய்யா? என் பெண்டாட்டி கையா? என்ற வகையில் ஈழத் தமிழ் இனத்தைப் பலி கொடுக்க இந்தியா தீர்மானித்து விட்டது.
இதில் தமிழகத் தமிழனைப் பற்றியோ அவர்களின் பாரம்பரிய தொடர்புகள் பற்றியோ இந்திய மத்திய ஆட்சியில் இருக்கும் ஆரிய மற்றும் பரதேசிகளுக்கு கரிசனை எழுவதில்லை.
அறிஞர் அண்ணா பேசி வந்த வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்ற குற்றச்சாட்டு இன்றும் உண்மையாய் இருப்பதைக் காணலாம்.

இலங்கையைப்; போன்றே வெளிநாட்டவர் வரும் வரை ஒரு தேசம் ஒரு இனம் ஒரு அரசு என இந்தியா இருந்த வரலாறே கிடையாது. இமயத்தை வென்ற தமிழ் மன்னரும் உண்டு குமரியை வென்ற வடக்கத்திய அரசர்களும் உண்டு. எனவே முழு இந்தியக் கண்டத்தையும் வளைத்துப் போட முயன்ற வட இந்திய உயர் தரக் குடும்பமான நேருவின் தந்தையாரான மோதிலால் குடும்பத்துக்கு ஆங்கிலேய வைசராய் குடும்பத்துடன் இருந்த நட்பு வசதி அளித்தது.
இலங்கையிலும் இதே சமாச்சாரம்தான்.தமிழர் பிரதேசங்களை யாழ்பாணத் தமிழ் வாலிபர் சங்கத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிங்களப் பிரபுத்துவக் குடும்பங்களான பாரோன் ஜயத்திலகா, டி.எஸ் சேனநாயக்கா, எப்.ஆர்.சேனநாயக்கா, பண்டார நாயக்கா சேர் ஜோன் கொத்தலாவலை போன்றோரின் வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் நட்பையும் மதிப்பையும் பெற்றுத் தமது இனத்தின் மேலாதிக்க நலன்களை வளர்த்துக் கொண்டனர்.
சோல்பரிப் பிரபு இலங்கை அரசமைப்பை வரைந்த போது தமிழர் தரப்பு அச்சங்களையும் எதிர்ப்பையும் கவனிக்காது எதேச்சையாக நடந்து முடிவுpல் 29(2) உபவிதிகளின் படி சிறு பான்மை யோருக்கான பாதுகாப்பை வழங்கி விட்டதாக நம்பிக் கொண்டார்.
தமிழருக்காகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜீ.ஜீ. பொன்னம்பலம் இலண்டன் சென்று குடியேற்ற அலுவலகத்தில் போராடிக் கொண்டிருந்த வேளையில் டி.எஸ். சேனநாயக்கா இரு தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கி அரசமைப்பை ஏற்கச் செய்துவிட்டார்.

இதே போன்ற வகையில் முகம்மது அலி ஜின்னாவை நேரு கையாள முற்பட்டு அதனால் இந்தியா, பாக்கிஸ்தான் கிழக்கு, மேற்கு என மூன்று பிரிவுகளாக்கிய வரலாறு இடம்பெற்றது. அதன்போது தொடங்கிய காஷ்மீரப் பிரச்சனை இன்று வரை தீர்வு காணமுடியாது மக்கள் இலட்சக் கணக்கில் துயரப் பட்டும் கொல்லப் பட்டும் வருகின்றனர். இலங்கையிலும் இந்தியாவிலும் ஆளும்; வர்க்கம் ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள்தான்.
இவ்வளவும் தமிழ் மக்களை இந்த இரு நாட்டின் ஆளும் தரப்பும் எவ்வாறு பார்க்கின்றன என்பதைக் காட்டுவதற்கே. இந்தியா காஷ்மீரப் பிரச்சனையில் ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்று மக்களின் வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணக் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எதிர்த்து வருகிறது. அங்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையற்றது எனப் பிடிவாதமாக இருக்கிறது.
இந்தியாவின் வரட்டுப் பிடிவாதத்துக்கு இன்று ஒபாமாவும் வேறு வழியின்றி இருநாடுகளும் சமரசமாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்கிறார். இலங்கையில் இனப் பிரச்சனையும் சிங்கள இலங்கையின் உள்வீட்டு விவகாரம் அதில் எவரும் தலையிடக் கூடாது என்பதே இந்தியாவின் பிரச்சாரம்.
ஆனால் அயல்நாடு என்ற வகையில் தனக்கு உரிமை உள்ளது எனக் காட்டி இன்று நேரடியாக இராணுவ டாங்கிகள் படையினருடன் முல்லைத் தீவை நோக்கிய தனது தமிழின மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அழிப்பதில் முன்னிற்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தனைதான் நேர்மையுடன் நடந்தாலும் இரண்டு சதிகார அரசுகளின் பிரச்சார மற்றும் அரச இராச தந்திர இயந்திரத்துக்கு ஈடு கொடுக்க முடியாது இருப்பது அது ஒரு ஆயுத இயக்கமாகப் பார்க்கப் படுவதேயாகும். எத்தனைதான் முயன்றாலும் அதன் வரலாற்று நடவடிக்கைகளை மூடி மறைத்து விட முடியாது.
இந்நிலையில் பலஸ்தீனத்தில் எப்படி ஹமாஸ் இயக்கம் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையிலும் இஸ்ரவேலின் தூண்டுதலால் உலக நாடுகள் அனைத்தும் ஹமாஸின் நிதி வளமும் கட்டுப் படுத்தப் பட்டு ஆட்சி செய்ய முடியாமலும் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்ற முடியாமலும் தடுக்கப் பட்டதோ அது போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலையும் இன்று உள்ளது.

எனவே இனிமேலும் தமிழ் மக்களைத் தாங்கும் முழுப் பொறுப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் போட்டு விட்டுத் தமிழினம் சவாரி செய்ய முடியாது.
அப்படிச் செய்தால் நாம் எவரும் கற்பனை செய்ய முடியாத அவலங்களைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் ஆனாலும் பிரபாகரன் போன்ற ஒரு சிறந்த தலைவரையோ தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஒரு தலைசிறந்த அமைப்பையோ தமிழினம் காண முடியாதவாறு ஆகிவிடும்.
இலங்கை இந்திய அரசுகள் தமிழினம் தலை எடுப்பதை அனுமதிக்கப் போவதில்லை.

இவற்றைக் கணக்கில் எடுத்து தமிழினம் தனது அடுத்த நடவடிக்கை பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. தமிழிர் தரப்பில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற அமைப்பாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது.
அவர்களை தமிழ் மக்கள் முன்னிறுத்தாது தமிழீழ விடுதலைப் புலிகளே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற எமது கூப்பாடு சர்வதேச அரங்கில் ஒரு ஆயுத அமைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அஞ்சப் படுகிறது.
அவர்களை தமிழ் மக்கள் முன்னிறுத்தாது தமிழீழ விடுதலைப் புலிகளே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற எமது கூப்பாடு சர்வதேச அரங்கில் ஒரு ஆயுத அமைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதாக அஞ்சப் படுகிறது.
மேலும் புலிகள் எதிர்ப்புச் சக்திகளின் தீவிர பிரச்சாரமும் இலங்கை இந்திய அரசுகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களுக்கு அனுகூலமான நிலைப் பாடட்டைப் பெற்றுத் தரமுடியாது உள்ளன. எனவேதான் இலஙகையரசின் கொடூரமான பொது மக்கள் மீதான தாக்குதலும் பாரிய மனித உரிமை மீறல்களும் உலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படாது தொடருகின்றன.
தமிழினத்தின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் ஒரே உறுதியான அமைப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இப்படிக் கூறும் போது நாம் ஆனந்த சங்கரி கருணா பிள்ளையான் டக்லஸ் போன்ற சந்தர்ப்ப வாதிகளைக் கருத்தில் எடுக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஏனென்றால் இப்படியானவர்கள் ஒரு போதும் தமது அபிலாசைகளைத் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள் சார்ந்து வெளிப் படுத்தியது கிடையாது.
எனவே சர்வதேச அரசியலில் எமது ஒரே ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடியதாக இருப்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஆனால் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத்தின் காலம் முடிவiயும் நிலையும், வரும் ஜுலையில் அது கலைக்கப்படும் சேதிகளும் வருகின்றன. எப்போ இவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து அகற்றி விடலாம் எனச் சிங்களத் தரப்பும் தமிழின விரோதக் குழுக்களும் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.
மகிந்தருக்கும் - இப்போதைக்குத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இருப்பது - ஜாதிக ஹெல உறுமய, ஜே.வீ.பீ. ஆகியோரின் தமிழின வெறுப்பை எரியூட்டத் தீனியாக இருக்கும் என்பது முதல் காரணம்.
இரண்டாவது காரணமாக இருப்பது உலக நாடுகளுக்கு இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது என்பதையும், தான் ஒரு ஜனநாயகவாதி எனச் சொல்லிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதே.
இரண்டாவது காரணமாக இருப்பது உலக நாடுகளுக்கு இலங்கையில் ஜனநாயகம் இருக்கிறது என்பதையும், தான் ஒரு ஜனநாயகவாதி எனச் சொல்லிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதே.
இனறு உலகம் எங்கும் தமிழ் மக்களின் உணர்வு அலையும் அனுதாபமும் உச்ச நிலையில் உள்ளன. இந்த அலை நெடுநாளைக்கு நிலைக்கும் என எதிர்பார்ப்பது இயலாத காரியம். எனவே இத்தகைய தருணத்தைத் தமிழினம் பயன் படுத்துவதே புத்திசாலித்தனம் ஆகும். இன்று இலங்கை அரசு தனது முட்டாள்தனங்களால் சுவிஸ் யேர்மன் போன்ற நாடுகளின் சினத்துக்கு ஆளாகி இருக்கிறது வெளிப் படையான உண்மை.
ஐரோப்பிய ஒன்றியமும் ஈழத் தமிழர் பற்றிய ஒரு சிறு அனுதாபத்தோடு உள்ளது. தமிழ் மக்களின் தொடரான உண்ணா விரதங்கள் கண்டனப் பேரணிகள் உலக நாடுகளின் கவனத்தை தமிழர் பக்கம் இழுத்து வருகின்றன.
வன்னிக் களமும் அங்குள்ள மக்களும் வரலாறு காணாத வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளனர். அவர்களின் அவலத்துக்கு அவசரமாக முடிவு காணப்பட வேண்டும்.
வன்னிக் களமும் அங்குள்ள மக்களும் வரலாறு காணாத வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளனர். அவர்களின் அவலத்துக்கு அவசரமாக முடிவு காணப்பட வேண்டும்.
எனவேதான் எமது அரசியல் தலைமையாக இருக்க வேண்டிய சகல தகுதியும் அங்கீகாரமும் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் குறுகிய கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று, உடனடியாகத் தனித் தழிழ் ஈழப் பிரகடனம் செய்து உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கலாம்.
இதன் மூலம் வன்னிக் களத்திலும் மக்கள் மீதும் உள்ள அழுத்தம் வெளிநாடுகளின் பக்கம் திரும்பும் சாத்தியமும் ஏற்படலாம்.
இதன் மூலம் வன்னிக் களத்திலும் மக்கள் மீதும் உள்ள அழுத்தம் வெளிநாடுகளின் பக்கம் திரும்பும் சாத்தியமும் ஏற்படலாம்.
இனியும் போர் நிறுத்தம் அமைதித் தீர்வு என்ற மாய மான்களின் பின்னால் தமிழினம் ஓடிக் காலத்தை விரையம் செய்வது பயன் அற்றது.
இப்பொழுது இந்தியா மகிந்த தரப் போகும் 13ம் சட்ட திருத்தத்துக்கு அமைய வடக்கிலும் கிழக்கிலும் இரு வேறு மாகாண சபைகளே ஈழத் தமிழருக்கான தீர்வு எனக் கூறத் தொடங்கிவிட்டது. இனிமேலும் இந்தியாவால் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு ஒரு போதும் கிட்டாது. இந்த நிலையில் இருந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அதற்கான ஒரே வழி தமிழீழப் பிரகடனம் ஒன்றேயாகும். செய்வார்களா?

![]() |
Comments