வருவார் வருவார் என்று பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் திடீ ரெனக் கொழும்புக்கு வந்தார்.
வந்த வேகத்திலேயே அரசாங்கத்துடன் ஏதோ பேச்சுக்கள் நடத்தினார். மீண்டும் புது டெல்லிக்குப் போய்விட்டார்.
ஆனால் அவரது வருகைக்கு முன்னர் இருந்த நிலைமையில் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை.
ஈழத்தமிழரைக் காப்பாற்ற இந்தியா ஓடோடி வரும் என்று நம்பியிருந்தவர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டுப் போயிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு வர விருப்பது பற்றி இந்தியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஏதோ மாற்றங்கள் நிகழப் போவதாக கதைகள் பரவின.
ஆனால், அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பயணத்தை மேற்கொண்டி ருந்தார் என்பதை இப்போது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
""இலங்கையில் உள்ள நிலைமைகளை நேரில் பார்க்க அழைப்பு விடுத்தோம். வந்தார்.பார்த்தார்.
பாராட்டி விட்டுப் போனார்'' என்று கூறியுள்ளது இலங்கை அரசு.
பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் போகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து அதாவது போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவார் என்றெல்லாம் கற்பனையில் இருந்த தி.மு.க. அரசுக்கு இப்போது தர்மசங் கடம்.
தமிழக அரசுக்கு மட்டுமன்றி அங்குள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு, பிரணாப் முகர்ஜியின் பயணத்தை அடுத்து மத்திய அரசு மீது பெரும் சீற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத் தியிருக்கிறது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவிடம் உறுதி பெற்றுக் கொண்டு திரும்பியிருப்பதாக பிரணாப்முகர்ஜி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள இந் தக் கட்சிகள் தயாராக இல்லை.
மத்திய அரசு இதைத்தான் செய்யும் என்று கூடத்தெரியாதளவுக்கு தமிழகக் கட்சிகள் ஏமாளிகளாக இருந்திருப்பது வேதனைக்கு? யதே.
இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ?ன் நலன் குறித்து சற்றேனும் கவலைப்படவோ கரிசனை கொள்ளவோ இல்லை.
அதன் முற்று முழுதான நோக்கமும் புலி களை அழிப்பதற்கான உதவிகளைச் செய்வதி லும் அதன் மூலம் பிரபாகரன், பொட்டு அம் மான் போன்றோரை தம்மிடம் ஒப்படைக்கக் கோருவதிலும் தான் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் நலனையிட்டு கொஞ்சமும் கரிசனை கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் தாமும் கட்சியை நடத்த வேண்டும், தமிழகக் கட்சிகளின் தயவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஈழத்தமிழ ருக்கு உதவிகள் செய்வது போல இந்திய மத்திய அரசு நடித்துக் கொள்கிறது அவ்வளவு தான்.
அதற்கு மேல் போர்நிறுத்தம் செய் யச் சொல்வதற்கான முயற்சிகளில் இறங்குவது, பேச்சுவார்த்தை பற்றி ஆலோசிப்பது எதிலும் இந்தியாவுக்கு விருப்பம் கிடையாது, மொத்தத்தில் சோனியாகாந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் புலி களையும் பிரபாகரனையும் தண்டிப்பதற்கான, பழி தீர்ப்பதற்கான சந் தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள் கின்றனர்.
ஆனால் இந்தப் போருக்குள் தமிழ்மக்கள் படு கின்ற அவலங் களை யிட்டு இந் தியா கவலைப் படும் நிலையில் இல்லை. இதை பிரணாப் முகர்ஜி யின் பயணத்தில் இருந்து தெளி வாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஈழத்தமிழரின் பாதுகாப்பின் மீது இந்தியா வுக்கு அக்கறை இருந்திருப்பின் வன்னியில் நூற்றுக்கணக்கில் தமிழ்மக்கள் கொல்லப்படு கின்ற வரைக்கும் வேடிக்கை பார்த்திருந்திருக் காது.
மோதல்கள் தீவிரமடையத் தொடங்கியதுமே மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக் கும். ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவி டம் அப்படியானதொரு உறுதிமொழியைக் கொடுத்திருந்தது.
ஆனால் அதற்குப் பின்னர் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது பாதிக் கப்பட்ட போது அதையிட்டு கவலை கொள் ளாமல் இருந்த இந்தியா நிலைமை கையை மீறிப்போய் விடுமோ என்ற பயம் வந்தபோது தான் விழித்துக் கொண்டது.
நூற்றுக்கணக்கில் பொது மக்கள் சாகின்ற நிலை வந் ததும் ஓடிப்போய், பிரச்சி னையை கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொள் ளுமாறு ஆலோசனை கூறிவிட்டுப் போயிருக் கிறார் பிரணாப்முகர்ஜி.
புலிகளின் அழிவு பற்றி இந்தியா ஆவ லோடு பார்த்துக் கொண்டிருக்கி றது. பிரபா கரனை இலங்கை அரசு பிடித்து தம் மிடம் ஒப் படைக் கும் என்று கனவில் மிதக்கி றது.
பொது மக்கள் பெரு மளவில் கொல் லப்பட்டு நிலைமை சர்வதேச தலையீடு வரைக்கும் போய்விட்டால் போர்நிறுத்தம் வந்து விடுமோ என்று இந்தியாவுக்கு கலக்கம் இருக்கிறது.
ஆனால் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு வருகைக்குப் பின்னரும் வன்னியில் பொது மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதா கத் தெ?யவில்லை. அதற்குப் பின்னரும் பெரு மளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின் றனர்.
முன்னர் இராணுவ நடவடிக்கைகள் குறித்து எழுதுவதே தேசத்துரோகமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பொதுமக்கள் பாதிக் கப்பட்டது பற்றி கருத்து வெளியிட்டாலும் அதே நிலையைத் தான் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
போருக்குள் வாழுகின்ற நான்கரை இலட் சம் மக்களின் வாழ்வு பற்றி இந்தியா சிந்திக் கின்ற நிலையில் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
இந்தியாவின் முழுமையான ஆசீர்வாதத் தோடு இலங்கை அரசு போரை நடத்திக் கொண்டிருப்பது தெளிவாகியிருக்கின்ற நிலையில் இந்தியாவின் கொடுக்கைப் பிடித்துக் கொண்டு தமிழகத் தலைவர்கள் தொங்க நினைப்பது முட்டாள்த்தனம்.
இனிமேலும் இந்தியாவின் ஆசிக்காக ஆதரவுக்காக தமிழ்மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பது "அவலை நினைத்து உரலை இடிப்பதற் குச் சமம்'.
சிவ்சங்கர் மேனன் வந்து பேசி விட்டுப் போனதற்கும் சரி பிரணாப் முகர்ஜி வந்து போனதற்கும் சரி இலங்கை அரசு போர் முனைப்பில் தான் தீவிரம் காட்டி நிற்கிறது.
இது இராணுவவழித் தீர்வின் மீதான அதன் அசைக்க முடியாத பற்றை வெளிப்படுத்தியி ருக்கிறது. புலிகளை அழித்து விட்டாலோ அவர்களின் வசமிருக்கின்ற பகுதிகளைக் கைப்பற்றி விட்டாலோ போரை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம், பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்பது தவறான கண்ணோட்டம்.
இது இப்போது பலருக்கு விளங்காது. இதே சித்தாந்தம் சரியானதாக இருந்திருந்தால் ஆப்கானிஸ்தானில் இன்றைக்கு தலிபான்கள் இருந்திருக்கமாட்டார்கள்.
இலங்கையில் தமிழ்மக்களின் சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத் தப்படும் வரைக்கும் போராட்டத்துக்கு முடிவு வருவது சாத்தியமில்லை.
அப்படியான மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தீர்வை அரசாங்கம் வழங்கி னால் நிச்சயமாகப் போராட்டத்துக்கு முடிவு வரும். ஆனால் ஒரு போதும் சிங்கள தலைவர்களிடமிருந்து அத்தகையதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
எனவே புலிகள் இயக்கத்தை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்தி மரபுவழியாகச் செயற்பட முடியாமல் செய்தால் கூட போர் முடிவுக்கு வந்துவிடாது என்பதே உண்மை.
இந்தக் கட்டத்தில் ஒரு விடயத்தை நினை வில் கொள்வது முக்கியம்.
இந்தியாவை இனிமேல் எந்தக் காலத்திலும் தமிழ்மக்கள் நம்பியிருக்க முற்பட்டால் வர லாற்றுத் தோல்விகளை அவர்கள் இன்னும் இன்னும் சந்திக்கின்ற நிலைமையை ஏற்படுத் தும் என்பதே அது...
Comments