மலேசியாவில், ஈழத் தமிழர்களின் அவலத்தை போக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தன்னுயிரை தீக்கிரையாக்கிய தியாகி ஈழத்தமிழன்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மலேசியாவில் ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே ஈழத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீக்குளித்து தியாகியாகியுள்ளார். அந்த இளைஞர் தீக்குளிக்கும் போது தன் நாளேட்டில் பின்வருவனவற்றை குறிப்பிட்டுள்ளார்.
எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் திகதி நான் பிறந்தேன்.
2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன்.
எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.?
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும்,
அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நோர்வே அமைதித் தூதர், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும்.
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்,உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.அதில் ராஜா கூறியிருப்பதாவது...
விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டயரி, ஒரு பேர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம். எனது டயரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.
ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஈழத் தமிழர்களுக்காக நடந்துள்ள 4வது தீக்குளிப்புச் சம்பவம் இது எந்த ஒரு நாடும் ஈழத்தமிழர்கள் சார்பான தீர்மானங்களை எட்டாது இன அழிப்பு மேற்கொள்ளும் சிங்கள இராணுவத்திற்கும் சிங்கள அரசுக்கும் வக்காளத்து வாங்கும் வகையில் செயற்பட்டுவருவது தமிழர்கள் மனதில் மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் மதுரை ரவி என்பவர் உயிரிழந்தார். நேற்று நாகை மாவட்டம் சீர்காழியில் கொங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ரவிச்சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஈழத் தமிழர் ஒருவர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
Comments