இந்தியாவின் தலைநகரான் புதுடில்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான கூட்டத்தொடர் தொடங்கும் எதிர்வரும் வியாழக்கிழமை (12.02.09) நாடாளுமன்றத்திற்கு முன்பாக பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஈழத் தமிழர் தோழமைக்குரல் என்னும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர் தோழமைக்குரல் என்ற அமைப்பின் அமைப்பாளர்களாக எழுத்தாளரும் தமிழ்ப் படைப்பாளின் முன்னணியின செயலாளருமான பா.செயப்பிரகாசமும், கவிஞர் லீனா மணிமேகலையும் உள்ளனர்.
அவர்கள் இப்போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாக தெரிவிக்கையில்:
இந்திய அரசே!
- ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தி வரும் இனப் படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
- தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
- தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்!
- கொல்லப்பட்ட தமிழ் மீனவா்களுக்காக சிறிலங்கா அரசின் மீது நடவடிக்கை எடு!
என்பன முன்வைக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.
Comments