கவனயீர்ப்பு நடவடிக்கை, சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்.

பிரான்சில் தமிழ் மக்கள் செறிந்து காணப்படும் பகுதியாகிய லாச்சப்பல் பகுதியில் (23.02.2009) திங்கட்கிழமை அன்று திடீரென ஒன்று கூடிய, பல நூற்றுக் கணக்கான இளையோர் அங்குள்ள விற்பனை நிலையங்களுக்குள் சென்று சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து வீதி ஓரங்களில் போட்டு எரித்துள்ளனர்.

சிறிலங்காப்பொருட்களை கொள்வனவு செய்வதால், அப்பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிப்பதற்கு, கொடிய அரசிற்கு நாமே துணை நிற்கிறோம் என வானதிரக் கூவிய இளையோர், தமிழ் மக்களாகிய நாங்கள் சிறிலங்கா பொருட்களை வாங்குவதை அறவே ஒழிப்போம் எனவும் கூறியிருந்ததுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது ஒரு அடையாளப் போராட்டம் எனவும் கூறியிருந்தனர்.

இதே நேரம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டிலிருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Comments