யாருக்காக மாய்கிறார்கள் இந்த இணைத் தலைமை நாடுகள் - நா.உ கஜேந்திரன்

இணைத் தலைமை நாடுகளால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையானது மனவருத்தத்குரிய முறையில் பிழையான ஆதாரங்களை அடிப்படைபடையக கொண்டிருப்பதனால் விபரீத முடிவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்நெற் இணையத் தளத்திற்கு கருத்துக் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

இனவாதம், இராணுவ மேலாதிக்கம், மனித உரிமை மீறல்கள் என்வற்றினால் இன்றய கால கட்டத்தில் மிகக் கொடுரமான இனப்படுகொலை புரியும் தேசமாக காணப்படும் இலங்கையை காப்பாற்றுவதற்காக இன்றய போரின் இணைப் பணிப்பாளர்கள் மேற்கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது எனவும் தெரிவித்த அவர்

இணைத் தலைமை நாடுகள் உண்மையாகவே ஈழத் தமிழ் மக்களின் ஐனநாயக உரிமைகளிலும் தேசியத்திற்கான அபிலாசைகளிலும் கவனம் கொண்டிருந்திருப்பின் இப்பிரச்சினையில் அவர்களின் அணுகு முறை வேறுபட்டு இருந்திருக்கும் எனவும் கூறினார்.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

முதலாவதாக, பொது மக்களின் சுதந்திரமான வெளியேற்றத்திற்கு புலிகளை ஏற்றுக் கொள்ளவைக்க முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தின் பெயரிலேயே இணைத் தலைமை நாடுகள் தங்களது நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர்.

வன்னியில் தங்கியுள்ள மக்கள் தாங்கள் வன்னியில் இருந்து இராணுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றால் தங்களுக்கு ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு அஞ்சியே, விடுதலைப் புலிகளுடன் தங்கியிருக்க விரும்பும் தங்கள் நிலைப்பாட்டினை ஏற்கனவே வெளிக் காட்டியிருந்தனர் என்பதும் இணைத் தலைமை நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். எவ்வித நிபந்தனையும் அற்ற போர் நிறுத்தம் ஒன்றே அங்குள்ள மக்களின் நிலைமைகளை பாதுகாக்க உதவும்.

இரண்டாவதாக, விடுதலைப் புலிகள் தமது பிரதேசங்களின் மீதான தங்களின் கட்டுப்பாட்டினை இழப்பதன் மூலம் போர் முடிவுற்றது என்றும், தமிழ் மக்கள் தமது தேசியத்திற்கான உரிமைப் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர் என்ற பிழையான முடிவிற்கும் இணைத் தலைமை நாடுகள் வந்துள்ளன.

மூன்றாவதாக, விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை, இன ஒழிப்பில் ஈடுபட்டிருக்கும் கொழும்பு அரசிடம் கையளித்து அடைக்கலம் புகும்படி கோருவதன் மூலம் இணைத் தலைமை நாடுகள் தாங்கள் மகிந்தராஐபக்சவின் ஊதுகுழல்கள் என்பதனை நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் தமிழ் தேசியத்திற்கான தங்கள் கொள்கையில் கொண்டுள்ள பற்றுறுதியும், ஈழத்திலும் புலம் பெயாந்து வாழும் தமிழ் மக்களிடையேயும் அவர்களுக்குள்ள ஆதரவும் இணைத் தலைமை நாடுகளுக்கு தெரிந்ததே. இந்த யதார்த்தமற்ற கோரிக்கையானது இணைத் தலைமை நாடுகளின் நோக்கத்திலும் தற்போதைய நிலைப் பாடுகளிலும் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக அமைகின்றது

நான்காவதாக, சிறீலங்காவினது தற்போதுள்ள ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழ் அரசியல் தீர்வு ஒன்றினை எட்டுவது முடியாது என்ற அடிப்படை விடயத்தில் இணைத் தலைமை நாடுகள் மீண்டும் ஒரு முறை வழக்கம் போல நழுவல் போக்குடையவர்களாகவே காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் அவர்கள் ஓங்கி ஒலித்ததற்கு மாறாக அவர்கள் எப்பொழுதும் சமாந்தரமான அரசியல் தீர்வைப் பற்றி கவலைப்படாமல் யுத்த முயற்சி ஒன்றிற்கே துணை போயிருக்கிறார்கள்.


சுருக்கமாக கூறுவதாயின் இணைத் தலைமை நாடுகள் தமிழ் மக்களை நசுக்குவதனையே கோரியுள்ளனர்.

ஐந்தாவதாக, அவர்கள் தமிழ் மக்களின் இருப்புக்கும,; அகதி முகாம் வாழ்க்கைக்கும,; உத்தரவாதத்தினை பெற்றுத்தருவதற்குமான முயற்சிகளில் ஈடுபடுவோம் எனவும் உறுதி கூறுகின்றார்கள். ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் கொழும்பு அரசினை மனித உரிமையினை பேணச் செய்வதற்கு தாங்கள் எடுத்த முயற்சிகள் எவ்வளவு தூரம் பயன் தந்தது என்பதனை அறிவார்கள்.
இலங்கைத் தீவை பொறுத்தளவில் தமிழ் மக்களுடய பாதுகாப்பும் மனித கௌரவமும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட்டவர்களின் கைகளிலேயே உள்ளது என்ற ஆழமான உண்மையை இணைத் தலைமை நாடுகள் கருத்தில் கொள்ள தவறிவிட்டன.

நாகரீக உலகமானது, கொழும்பு அரசின் கொலைவெறி, இரண்டகத்தன்மை, அநீதி, என்பவற்றினை முற்றாக உணர்ந்து அதற்கு எதிரான கண்டனத்தினை வெளிப்படுத்தும் வேளையில், இணைத் தலைமை நாடுகள் பாதிக்கப்பட்டவர்களை தங்களுடய பாதுகாப்பினை கைவிட்டு கொலை வெறியர்களின் கையில் அடைக்கலம் புகுமாறு கோருவது மானுடத்தினை கேலிக்குரியதாக்குவதாகும்.
பிற்போக்கான உலக அமைப்புக்கள் மானிட முன்னேற்றத்திற்கும் ஐனநாயகப் பண்பிற்கும் இதன் மூலம் ஒரு பிழையான சமிக்கையை கொடுத்துள்ளனர்.

இங்கு இணைத் தலைமை நாடுகளில் நடவடிக்கையில் நோர்வேயின் செயற்பாடு மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். மிகவும் கௌரவமான, நடு நிலைமையான ஏற்பாட்டாளர்களாக செயற்படத் தொடங்கிய இவர்கள் இவ் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளதன் மூலம் கொழும்பு அரசின் இன ஒழிப்பு கொள்கையினை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒடுக்குவதற்கும் முயன்ற இணைத் தலைமை நாடுகளுக்கு துணை போயுள்ளனர்.

நோர்வே நாடானது, இலங்கைப் பிரச்சினையில் தங்களுடய பங்களிப்பு இரு தரப்பினரதும் அழைப்பின் பெயரிலேயே இடம் பெற்றது என்று எப்பொழுதும் கூறி வந்துள்ளனர். எனினும் தற்பொழுது அவர்கள் மேற் கூறிய தரப்பில் ஒரு தரப்பினரை மட்டும் சரணடையும்படி கோரும் அறிக்கையில் கையொப்பம் இட்டிருப்பது அவர்களின் சர்வதேச சமாதான ஏற்பாட்டாளர்கள் என்ற நிலையில் உண்மையற்ற தன்மையையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கத்தில் இவர்கள் சில சக்திகளின் கைப்பாவையாக செயற்படுகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டினையே ஏற்படுத்துகின்றது.



Comments