இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திவரும் இனப்படுகொலை தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் அளித்துள்ள வாக்குமூலத்தின் மீது மத்திய கிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் சபையின் துணைக்குழு நாளை விசாரணை நடத்துகிறது.
"சிறிலங்காவில் அண்மையில் நடந்துள்ள வன்முறைகள்" தொடர்பான எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை நேரில் அளிக்குமாறு மத்திய கிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் சபையின் துணைக்குழு தலைவர் ராபர்ட் கேசேயின் அலுவலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாக ஃபெய்ன் தெரிவித்தார்.
புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் இனப்படுகொலைகள் தற்போது முன்பைவிட மாறுபட்டு, அவர்களை தொடர்ந்து தாக்கி இடம்பெயரச் செய்தல், உடல்ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தை அழித்தல் என்ற வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நடுநிலையாளர்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு பகுதிகளில் 2,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டிவிட்டது. இடம்பெயர்ந்து உள்ளவர்களின் எண்ணிக்கை 3,50,000 என மதிப்பிடப்பட்டு உள்ளது.
சிங்கள புத்த அரசான சிறிலங்கா, ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது. மனிதாபிமானப் பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டது. சர்வதேச் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைக் கண்காணிப்புக் குழு என அனைத்தும் வெளியேற்றப்பட்டுவிட்டன. சிறிலங்க அரசின் 'தமிழர்கள் அறவே இல்லாத' சிங்கள ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையை அவதானிக்க நடுநிலையான கண்காணிப்பாளர்களோ, சுதந்திரமான செய்தியாளர்களோ களத்தில் இல்லை.
பாதுகாப்பு வலயங்கள், பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் மீது தினமும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் மீது அவர்களை அழிக்கும் நோக்கத்துடன் பெரும்பான்மை சிங்களப் படைகள் செயல்படுகிறார்கள்.
இதைத் தடுக்கப் பின்வரும் நடவடிக்கைகளை செனட் மேற்கொள்ள வேண்டும்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் விதிகளின் கீழ் சிறிலங்காவிற்கு சர்வதேச நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்.
அமெரிக்கச் சட்டங்களின் கீழ் சூடான், ஈரான், சிரியா, கியூபா உள்ளிட்ட நாடுகளைப்போல சிறிலங்காவையும் அரச பயங்கரவாத நாடுகள் பட்டியலில் கொண்டுவந்து மேலும் பல தடைகளை விதிக்க வேண்டும்.
கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரின் அமெரிக்கச் சொத்துக்களை முடக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்க அரசின் தலைவர்கள் அனைவருக்கும் விசாக்களை மறுக்க வேண்டும்.
ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியன சிறிலங்காவிற்கு நிதி உதவி செய்யாமல் தடுக்க அமெரிக்கா வாக்களிக்க வேண்டும்.
சிறிலங்கப் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டணச் சலுகைகளை நீக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத்பொன்சேகா ஆகியோரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு "சுயாட்சி கொண்ட இரண்டு நிர்வாக அமைப்புகள்" என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.
இனப்படுகொலையும் அப்பாவித் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதும் நிறுத்தப்படும் வரை கொழும்புவில் இருந்து அமெரிக்கத் தூதரை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Comments