ராணுவமே மக்களை கொன்றது புதுக்குடியிருப்பு அரசியல் பொறுப்பாளர் சி .இளம்பருதி

விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இளம்பருதி, வன்னியில் நடை பெற்ற இடம் பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணமென இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிக்கையை முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

அவர் மேலும் இலங்கை இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரங்களிலுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதனால் பலர் உயிர் இழந்ததுடன் பலர் காயமடைந்த்தகாவும், இராணுவத்தின் நோக்கம் அப்பாவி மக்களை பலாத்காரமாக தங்கள் பிடியினுள் கொண்டு வருவதே எனவும் கூறினார்.

கடந்த நாலு வாரங்களாக பல ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்றும் படு காயப்படுத்தியும் வந்த இராணுவம், அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தங்களை திசைமாற்ருவதற்காக இப்பொழுது பொய்ப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது என்றார் அவர்

மேலும் திரு.இளம்பருதி கூறுகையில் சர்வதேசம் மக்களின் பாதுகாப்பு மற்றும் மருந்து போன்ற வசதிகளை பெறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.


Comments