"இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்": ஐரோப்பிய ஒன்றியம்
"இலங்கையில் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்": ஐ.நா. செயலாளர் நாயகம்
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் ‐ கனேடிய ஜனநாயக கட்சி. NDP
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவர் ஜெக் லெய்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை உயர்ஸ்தனிகருடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
உடனடியான போர் நிறுத்தம் ஒன்று இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாகவும் லெய்டன் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெறு வரும் பகுதிகளில் உதவி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு, அந்த பகுதிக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்து கனேடிய தமிழர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் செயற்படுத்தி வரும் நடைமுறைகள் குறித்து தாம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கனேடிய தமிழர்கள் முகாமில் உள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் தான் கோரியுள்ளதாக ஜெக் லெய்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பிரதிநிதி போர் நிறுத்தம் ஏற்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளதாகவும் அதனை லெய்டன் நிராகரித்துள்ளதாகவும் புதிய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடானது பிராந்தியத்தில், அமைதியை ஏற்படுத்துவதற்கு உடனடியான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பினர் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்துடன் நேரடியான முனைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமே இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற தெளிவான நிலைப்பாட்டில் புதிய ஜனநாயக கட்சியினர் இருப்பதாகவும் லெய்டன் கூறியுள்ளார். கனேடிய தமிழர்களுடன் சந்திபொன்றின் போதே ஜெக் லெய்டன் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்

Comments