வட்டியுடன் மீளளிப்பு செய்யப்படவேண்டிய ஒத்தி வைக்க முடியாத காலப்பணிஎம் கண்முன்னே விரிகின்றது

annaiவணக்கம்!எமதான உறவுகளே உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது கையறு நிலை என்பது இதுதானோ?

உலகம் பூராவும் எழுச்சி ஊர்வலங்கள்,உணர்ச்சி கொந்தளிப்பின் அதி உச்ச வெளிப்பாடாக உயிர்த்தியாகம் வார்த்தைக்களிற்கு அப்பாற்பட்ட தாயகத்தில் எம் இனம் படும் இனப்படுகொலையின் அதி உச்ச அவலம்,இவ்வளவையும் நிச்சயமாக எமதான உறவுகளால் சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துரைதுள்ளோம்,ஆயினும் சர்வதேசம் எந்த ஓரு ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க(முடிய)வில்லை.

மேலும் ஸ்ரீலங்கா,அதாவது ஆக்கிரமிப்பு இராணுவம் எந்த சர்வதேசத்தின் அழுத்தத்தையும் லட்சியப்படுத்துவதாக இல்லை,எல்லாமே இந்தியா,இந்தியாவாகிவிட்ட தாற்பாரியமேதவிர வேறென்ன?இலண்டனில் இருந்தும்,ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்ற இணையத்தலைமை நாடுகள் கூட கையை விரித்து விட்ட அவலம்தான் இங்கு யதார்த்தமானது.

முதலில் இலங்கையில் தற்போது நடப்பது நிச்சயமாக யுத்தம் இல்லை,,மாறாக இன அழிப்பு நன்றாக திட்டமிடப்பட்ட தமிழின ஓழிப்பு இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை,,இவ்வாறான யதார்த்தத்தை, இணைத்தலைமை நாடுகள் கூடகருத்தில்எடுக்கவில்லை என்பது இவர்களின் உண்மைத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது..

இந்த யதார்த்தத்தை நம்மில்பலர் ஏலவே உணரத்தவறியதன் விளைவாகவே இன்றைய நிலையை எனதானபார்வை ஏற்படுத்துகின்றது. பலமுள்ளவனே வாழ்வான் இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் சந்தேகம் இல்லை,ஆயின் எமதான விடுதலை இயக்கமான விடுதலைபுலிகளை நாம் சரியான ரீதியில் தலைவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் விட்டது,, புலம் பெயர் தமிழர் செய்த மன்னிக்கமுடியாத, ஏற்றுக்கொள்ளமுடியாத பாரியதவறு.

annai

நம்மில் அநேகர் ஏ9பாதையை திறந்ததுடன் ஒத்தி வைத்துவிட்டனர் தமதான தாயகப்பணியின் தொலைதூர காலப்பணியை. கைகழுவி,நழுவவிட்டு,விட்டு தற்போது ஏகமாகப் புலம்பிக்கொள்கின்றோம்.எமதான உறவுகளே யதார்த்மான களநிலையை புரிந்து கொண்டு சித்திக்கும் காலப்பணியாற்ற வாருங்கள்.

எந்த ஓரு நாடும் எமக்கு எதையும் தூக்க தரப்போவதில்லை என்பதை நிறைவாகப்புரிந்து கொண்டு தங்கதலைவன் பிரபாவை,எமதான தேசியத் தலைவனை பூரணமாக நம்பி எமதான நிதிப்பங்களிப்பை பரிபூரணமாக இன்னமும்,இன்னமும் மேலாக்கி எமதான விடுதலை இயக்கத்தை பலப்படுத்துங்கள்,முடிப்பதற்குமுன் மீண்டும் ஞாபகப்பபடுத்துகின்றேன் தாயகத்தில் தற்போது இன அழிப்பே நடைபெறுகின்றது.

ஈழப்போர் 4 இனித்தான் காலக்கனிவோடுஆயினும் விரைவில் களம் காணும் அதற்கு ஏற்றாற் போல் எமதான விரைவுப்ணியை முன்னெடுப்போம்,நம்பிக்கை கொள்ளுங்கள்,தளராதீர்கள்,பட்ட கடனை ஸ்ரீலங்காவிற்கு இரட்டை மடங்காக இன்னமும் சொல்லப்போனால் வட்டியுடன் மீளளிப்பு செய்யப்படவேண்டிய ஒத்தி வைக்க முடியாத காலப்பணிஎம் கண்முன்னே விரிகின்றது.


Comments