இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலில் கடற்படையினரின் ‘அரோ’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதிஇ கடற்படையின் P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை.
கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றுஇ தரைவழி நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
மூன்று வாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும்இ இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றன.
கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப
வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.
முதலாவது தாக்குதல் கடற் கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு 11.28 மணியளவில் கரும்புலிகளின் தாக்குதல் படகுஇ கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிகளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 ஆவது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன்இ படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.
அத்துடன் லெப். பெரேரா மற்றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேரமும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில்இ சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற் கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
அது கடற்படையினரின் கண்ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால்இ அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப்புக் கொமாண்டோ அணியினரின் ‘அரோ’ கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமடக்கித் தாக்குதல் நடத்தினர்.
15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு ‘அரோ’ வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப் பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால்இ கடற்படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.இதன்பின்னர் தான் கடந்த 8 ஆம்; திகதி முலலைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்குதல் படகைக் கடற் கரும்புலிகள் மூழ்கடித்திருக்கிறார்கள்.
இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடந்திருகிறது. கடற் கரும்புலிகளோடு கடற்புலிகளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு ‘சுப்பர் டோறா’ மூழ்கடிக்கப் பட்டதாகவும்இ மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப் பட்டதாகவும்இ 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால்இ முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
ஏனெனில்இ கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வலயங்கள் அமைத்து தமது வௌ;வேறு விதமான 50 இற்கும் அதிகமான போர்க்கலங்களை நிறுத்தியிருக்கிறது.
அதுவும்இ புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோரப் பகுதியானது - சாலைக்குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.இந்தநிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரியமாகவே இருக்கிறது.ஆனாலும்இ கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகுகள் மூலமும்இ அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும்இ அதையடுத்து பீரங்கிப் படகுகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.
கடைசியும் நான்காவதுமான கண்காணிப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாகவே நடமாடுகின்றன.
அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதிவேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள்இ ஆழ்கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந்த தாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.
கடற்புலிகளின் நோக்கம் நிச்சயமாக ஒரு வலிந்த தாக்குதலுக்கான பயணமாக இருக்கவில்லை என்பதே உண்மை.அவர்கள் கடல்வழி விநியோகப் பயணங்களை மேற்கொண்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமது விநியோக நடவடிக்கைக்குக் குறுக்கே கடற்படையினர் வந்தபோது அந்தப் படகுகளைத் தாக்கி அழித்திருக்கின்றனர்.
கடற்புலிகளை 15 கி.மீ நீளமான கரையோரத்துக்குள் முடக்கியிருக்கின்ற போதும் - அவர்களின் கடல்வழி நடவடிக்கைகைகள் –விநியோகங்கள் - தாக்குதல்களை முடக்க முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை.கடற்புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல் சூசை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வில் பேசிய போது - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி;ச் சண்டைகள் கடலிலேயே நடைபெறும் என்று கூறியிருந்தார்.
அவர் கூறியபோது கிளிநொச்சி புலிகளிடம் இருந்தது. வடமராட்சி கிழக்குஇ முல்லைத்தீவு என்பன புலிகளிடம் இருந்தன.அந்த உரையை இப்போதைய நிலையுடன் ஒப்பிட முடியா விட்டாலும் - இப்போதைய சண்டைகளை இறுதிப் போராக அரசதரப்புச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் கடலில் சண்டைகள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.
ஒரு காலத்தில் கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல்களைத் தடுத்து விடுவோம். இனிமேல் அவர்கள் நெருங்கவே முடியாது என்று மார்தட்டிக் கொண்டிருந்த கடற்படை அண்மைக் காலத்தில் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளை கரும்புலித் தாக்குதல்களில் பறிகொடுத்திருக்கிறது.
முல்லைத்தீவுக் கடலில் கடைசியாக நடந்திருக்கின்ற சண்டையின் போது கடற்படையினர் கரும்புலிகளின் ஒரு படகை மூழ்கடித்திருப்பது உண்மை. ஆனால்இ மற்றைய படகு கடற்படைப்படகு மீது மோதி வெடித்து அதை நாசப்படுத்தியிருக்கிறது.
ஆனால்இ கரும்புலிகளின் ஒரு படகு வெடித்துச் சிதறும் காணொளிக் காட்சியைத் தான் கடற்படை வெளியிட்டிருக்கிறது.
இப்போது கடற்படைக்கு ஒரு பெரிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம்இ தாக்குதல் தளபதி சின்னக்கண்ணன் மற்றும் சிலர் சாலையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.கடற்புலிகளின் கடைசித் தளமான சாலையும் கைப்பற்றப்பட்டு விட்டது. உடையார்கட்டில் இருந்த புலிகளின் நீர்மூழ்கிப் படகு தயாரிப்பு தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு விட்டது. அங்கிருந்த நீர்மூழ்கிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டு விட்டது.
ஆனாலும்இ கடற்புலிகள் தாக்குகிறார்கள் என்று எப்படி தகவல்களை வெளியே விடுவதென்ற சிக்கல் படைதரப்புக்கு இருந்து கொண்டிருக்கிறது.இதனால் தான் முல்லைத்தீவுக் கடலில் நடக்கின்ற சண்டைகள் பற்றிய தகவல்கள் முடிந்த வரைக்கு மறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அதிலும்இ புலிகள் தரப்பு ஏதாவது செய்தியை வெளியே கசிய விட்டால் மாத்திரமே பாதுகாப்புத் தரப்பும் அந்தச்; சண்டை பற்றிய தகவலை வெளியிடும் போக்கு அவதானிக்கப் பட்டிருக்கிறது.
கடற்புலிகள் முடக்கப்பட்டே விட்டார்கள் என்ற கதை கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது தான் கடைசியாக ‘சுப்பர் டோறா’ மூழ்கடிக்கப் பட்டிருக்கிறது.கடற்புலிகள் இன்னமும் பலமிழந்து விடவில்லை என்பதைஇ அவர்களின் விநியோக - தாக்குதல் செயற்பாடுகளை படைத்தரப்பினால் முடக்க முடியாதிருப்பதைக்;; கொண்டே உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
இந்தநிலையில் தான் இரணைப்பாலையில் நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கொல்லப்பட்டு விட்டதாக படைதரப்பு அறிவித்தது.
பின்னர் ஒரு கட்டத்தில் அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறியது. கடைசியாகக் காணாமற் போய்விட்டதாகவும் சொல்லியது.ஆக எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? ஏதைச் சொல்லாமல் மறைப்பது என்ற குழப்பம் படைத்தரப்புக்கு உருவாகத் தொடங்கி விட்டது.
கடற்புலிகளின் சில தளபதிகள் சண்டைகளில் மரணித்திருக்கின்ற போதும் அவர்களின் செயற்பாடுகளில் தொய்வோ - தடங்கலோ ஏற்படவில்லை என்பது உறுதியாகவே தெரிகிறது.
அவர்களின் இந்தப் பலம் தான் கடற்படையை - அரசாங்கத்தை அதிர்ச்சியோடு பார்க்க வைத்திருக்கிறது.
அதுமட்டுமன்றி அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கும் கரும்புலித் தாக்குதல் படகுகளை வடிவமைத்திருக்கின்ற முறையும்இ நீர்மூழ்கிப் படகை வடிவமைத்திருக்கின்ற தொழில்நுட்பமும்; படைத் தரப்பை ஆச்சரியத்தின் விளிம்புக்கே கொண்டு சென்றிருக்கிறது.
சொந்தமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடற்புலிகள் தம்மை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது தான்; பலருக்கும் தெரியவந்திருக்கிறது.
உலகில் கடற்படை ஒன்றை வைத்திருக்கின்ற போராளி அமைப்பாக கருதப்பட்ட புலிகள் - நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்இ உற்பத்தி செய்யும் அமைப்பாக இருப்பது உறுதியாகியிருப்பதானது சர்வதேசத்தையே ஆச்சரியத்தில்; உறைய வைத்திருக்கிறது.
சர்வதேச நாடுகளின் நிதியுதவியிலும்இ அவர்களின் ஆயுதங்களையும் நம்பி சண்டையை நடத்திக் கொண்டிருக்கும் அரசபடைகளோடு ஒப்பிடும் போது - கடற்புலிகளின் வளர்ச்சியும் அவர்களின் செயற்பாடுகளும் அரசதரப்பை மிரள வைப்பதில் ஆச்சரியமில்லை.
இதனால் தான் கடற்புலிகளுக்கென்று ஒரு சிறு கடற்பகுதியையேனும் விட்டு வைக்கக் கூடாதென்ற நோக்கில் தரைப்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இப்போது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உகந்த பகுதியாக இருப்பது 15 கி.மீ கடலோரப் பகுதியே என்ற போதும் இதையும் கைப்பற்றும் முயற்சிகளில் படைத்தரப்பு இறங்கியிருக்கிறது.
ஒரு புறத்தில் 55 ஆவது டிவிசன். மறுபுறத்தில் 59 ஆவது டிவிசன். இந்த இரண்டின் நடுவே கடற்புலிகளின் படகுப் பயணங்கள் தொடர்கின்றன.
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கூறியது போன்று - கடலில் சண்டைகள் நடக்கும் வரைக்கும் - கடற்புலிகளின் பயணங்கள் தொடரும் வரைக்கும் தரையில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கவோ - நிறுத்தவோ - அழிக்கவோ முடியாது.
நன்றி: நிலவரம்
Comments