இலங்கையில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரால் மட்டுமே முடியும்
எனவே உடனடியாக இலங்கைக்கு அமைதிப் படைஅனுப்பி வைக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் தெற்காசிய விவகார தலைவராகவுமுள்ள ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சரணடையுமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து சுமார் 250,000 பொதுமக்கள் மத்தியில் பயம் கலந்த சந்தேகம் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் மோசமான நிலை குறித்து பிரித்தானிய பிரதி வெளிவிவகார காரியாலய அமைச்சர் மிலொச் பிறவுண், ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டா பெராரோ மற்றும் இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரொபர்ட் ஏவன்ஸ் மேலும் தெரிவித்தள்ளார்.
Comments