பாதுகாப்பு வலய பகுதிக்கு பொது மக்கள் செல்வதை விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் பிபிசியினூடாக மறுத்துள்ளனர்.
பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாக்க தவறியுள்ளதாக விடுதலைப்புலிகளின் தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வு கழகம் குற்றம்சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்கள் தொடர்பான தனது கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது. யார் அவர்களது கடமைகளை செய்ய தடையேற்படுத்துகிறார்கள் என்பதை ஜநா தெரிவிப்பதில்லை. மோதல்கள் நடைபெறும் வலயத்தில் இருந்த சில பணியாளர்களையும் அவர்கள் முற்றாக விலகி கொண்டதாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை சிவநாண்டியர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு உண்மையில் பொதுமக்கள் தொடர்பில் அக்கறை கொண்டிருந்தால், தேவையற்ற விடயங்களை பேசுதற்கும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும் இது உரிய நேரமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments