வன்னியில் வான் குண்டு, எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 101 தமிழர்கள் படுகொலை
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பவலன்பொக்கணை ஆகிய பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
[பெண் ஒருவரின் உடலைத் துளைத்து வெடிக்காத நிலையில் அவரை படுகாயப்படுத்தியிருக்கும் ஆர்பிஜி உந்துகணை. படம்: புதினத்துக்காக சகிலா]
குறிப்பாக மாத்தளன் பகுதியில் அதிகளவில் எறிகணை, துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல் என்பனவற்றையும் சிறிலங்கா படையினர் செறிவாக நடத்தினர்.
இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலவன்பொக்கணையில் 18 தமிழர்களும் வலைஞர்மடத்தில் 11 தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினரின் தொலைதூர துப்பாக்கிச் சூட்டு ரவை தாக்கியதில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணையில் உள்ள பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 15 தடவைகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதில் கைக்குழந்தைகளும் சிறுவர்களுமாக 17 பேர் உட்பட 41 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு இன்று கொண்டு வரப்பட்ட உடலங்களில் அடையாளம் காணப்பட்டவற்றின் விபரம்:
ம.தேனுஜா (வயது 03)
நீ.சுவர்ணா (வயது 13)
சு.சந்திரகலா (வயது 17)
ப.குகராஜ் (வயது 12)
செ.புவித்ரா (வயது 13)
ப.குகராஜ் (வயது 12)
செ.வித்ரா (வயது 13)
த.மதிஜினி (வயது 09 மாதங்கள்)
மி.மதீபன் (வயது 07)
கி.தமிழ்நிலவன் (வயது 08)
ஐ.சுதீபன் (வயது 07)
சு.நீலவாணன் (வயது 13)
ம.மதிவாணன் (வயது 07 மாதங்கள்)
க.கதிர்ச்செல்வன் (வயது 10 மாதங்கள்)
சி.சண்முகநாதன் (வயது 57)
க.மேரி யூலியட் (வயது 49)
கே.ரஜனிகாந்த் (வயது 29)
ர.நிரஞ்சினி (வயது 28)
த.மகேந்திரராசா (வயது 42)
உதயசாந்தினி (வயது 27)
வீ.வீரம்மா (வயது 60)
சு.தவமணிரீட்டா (வயது 45)
சு.ஜனதீசன் (வயது 07)
கி.கணேசநாயகம் (வயது 35)
ஏ.நேசமணி (வயது 79)
வே.மீனாட்சி (வயது 78)
கி.விமலாதேவி (வயது 47)
பி.மூக்கையா (வயது 67)
மூ.தவச்செல்வி (வயது 16)
ரா.புவனேஸ்வரி (வயது 45)
ந.நேசமலர் (வயது 54)
ச.கவிதா (வயது 22)
இ.நேசமலர் (வயது 29)
த.மகேந்திரராசா (வயது 43)
ச.தர்மலட்சுமி (வயது 59)
மா.செல்வநாயகம் (வயது 49)
ஜே.கொன்சாலியேஸ் (வயது 42)
கே.தர்மினி (வயது 35)
கி.விமலேஸ்வரி (வயது 47)
ம.சுப்பிரமணியம் (வயது 78)
கி.பார்த்தீபன் (வயது 37)
கி.நவரட்ணம் (வயது 48)
வி.யேசுபாலன் (வயது 85)
கே.மகாலட்சுமி (வயது 45)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
இதேவேளையில் புதுமாத்தளன் மருத்துவமனை இன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதில் மருத்துவமனைப் பணியாளர், தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர், நோயாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
மருத்துவமனைச் சூழலில் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் மருத்துவமனை வாசலுக்குள் படையினரின் ஆர்பிஜி உந்துகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
[படம்: புதினத்துக்காக சகிலா]
அதேவேளையில் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு முன்பாக இன்று பிற்பகல் 4:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் வீசிய எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது.
இதில் 15 பேர் காயமடைந்தனர்.
பின்னர் பிற்பகல் 5:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் வீசிய எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது.
இதில் சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 125-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
Comments