தொடரும் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்: இன்று 12 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை

வன்னிப் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இழப்புக்கள் இரண்டு கொத்துக்குண்டுகளால் ஏற்பட்டவை ஆகும்.



இதேவேளையில் அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

அதேவேளையில் சிறிலங்கா படையினரால் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தாக்குதல்களிலும் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



இதேவேளையில் பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவை குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

இத்தாக்குதல்களை காலை 7:40 நிமிடம், காலை 9:10 நிமிடம், பின்னர் பிற்பகல் 12:20 நிமிடம், பிற்பகல் 3:10 நிமிடம் ஆகிய நேரங்களில் சிறிலங்கா வான்படை நடத்தியுள்ளன.

இதில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 90 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

க.வேலாயுதம் (வயது 60)

வை.லலிதா (வயது 24)

இ.தினேஸ்குமார் (வயது 16)

ஜெ.தர்சிகா (வயது 09)

சு.நிரோஜினி (வயது 10)

இ.பரமேஸ்வரி (வயது 35)

ரா.பிரசாந்த் (வயது 04)

அ.தருமராசா (வயது 67)

சி.பிரபாகரன் (வயது 29)

இ.சாந்தரூபன் (வயது 26)

அ.வேனுஜன் (வயது 08)

வே.ஜெயந்தன் (வயது 24)

வி.கிருசாந்தன் (வயது 11)

செ.டானியல் (வயது 62)

ந.இராசாம்பாள் (வயது 70)

சொ.நிரோஜன் (வயது 09)

த.சத்தியரூபி (வயது 36)

சி.கலா (வயது 52)

செ.பொன்னன் (வயது 52)

ம.தாரா (வயது 32)

ஆ.ஜெயகொளரி (வயது 29)

த.வஜந்தினி (வயது 22)

குலமோகன் (வயது 03)

வி.பார்த்தீபன் (வயது 05)

மு.சுதாகரன் (வயது 28)

வி.செல்வராசா (வயது 48)

ம.கஜந்தினி (வயது 06)

இ.வீரசிங்கம் (வயது 28)

ந.சரவணமுத்து (வயது 32)

ஏ.பாலமணி (வயது 59)

சு.முகுந்தன்( வயது 28)

சு.அப்பையா( வயது 03)

ச.சதீஸ் (வயது 45)

அ.தமிழ்நிலவு (வயது 05 மாதம்)

க.ஈழவேந்தன் (வயது 03 மாதம்)

க.திலகேஸ்வரி (வயது 13)

ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரின் உடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

Comments