நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

நேற்றைய தினம் மட்டும் இலங்கை இராணுவத்தின எறிகணை மற்றும் விமானத்தாக்குதலில் 12 சிறுவர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் ,புதுமத்தளான்,முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கண்மூடித்தனமான வான் மற்றும் எறிகணைத் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பல சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தனர்.

சமீபகாலமாக இப்பகுதிகளில் தொடர்ந்தும் பல சிறுவர்களும் கற்பினித் தாய்மார்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.


Comments